இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் பெரிய பிரச்னை என்ன..? ரமீஸ் ராஜா அலசல்
இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் பிரச்னை குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவருமான ரமீஸ் ராஜா கருத்து கூறியுள்ளார்.
2021 டி20 உலக கோப்பை, 2022 ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை என அடுத்தடுத்து ஐசிசி தொடர்களில் தோற்று ஏமாற்றமளித்த இந்திய அணி, அடுத்ததாக இந்த ஆண்டு இந்தியாவில் நடக்கவுள்ள ஒருநாள் உலக கோப்பைக்காக தீவிரமாக தயாராகிவருகிறது.
ஒருநாள் உலக கோப்பைக்காக 20 வீரர்களை ஷார்ட்லிஸ்ட் செய்து, அவர்களை ஒருநாள் கிரிக்கெட்டில் சுழற்சி முறையில் களமிறக்குகிறது பிசிசிஐ. ஒருநாள் உலக கோப்பைக்காக இந்திய அணி தீவிரமாக தயாராகிவருகிறது.
சச்சின் - கோலி ஒப்பீடு.. கபில் தேவ் அதிரடி
சீனியர் தொடக்க வீரர் ஷிகர் தவான் ஒருநாள் அணியிலிருந்து கழட்டிவிடப்பட்டார். ஷுப்மன் கில், இஷான் கிஷன் ஆகிய இளம் வீரர்கள் இந்திய அணியில் சேர்க்கப்பட்டு, தவான் ஓரங்கட்டப்பட்டார். இஷான் கிஷன், ஷுப்மன் கில் ஆகிய இருவரும் இந்திய அணியில் ஆட வாய்ப்பு கிடைத்ததுமே, ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்து சாதனை படைத்தனர்.
வங்கதேசம், இலங்கை, நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்களை வென்று இந்திய அணி அசத்திவருகிறது. இந்திய வீரர்கள் அபாரமாக ஆடி வெற்றிகளை குவித்து அசத்திவருகிறது இந்திய அணி.
இந்திய அணி வீரர்கள் அபாரமாக ஆடிவரும் நிலையில், குறிப்பாக டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அசத்திவரும் நிலையில், இந்திய டாப் ஆர்டர் வீரர்களின் பிரச்னை குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா கருத்து கூறியுள்ளார்.
பாகிஸ்தான் அணியின் கேப்டன்சியிலிருந்து நீக்கப்படும் பாபர் அசாம்..! உறுதிசெய்த அஃப்ரிடி
இதுகுறித்து பேசிய ரமீஸ் ராஜா, இந்திய பேட்ஸ்மேன்கள் ஃப்ரண்ட் ஃபூட்டில் ஆடுவதில் சிக்கல் உள்ளது. குறிப்பாக இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பேக்ஃபூட்டில் நன்றாக ஆடுகின்றனர். ஆனால் ஃப்ரண்ட் ஃபூட்டில் ஆட தெரியவில்லை. அதுதான் இந்திய வீரர்களின், குறிப்பாக டாப் ஆர்டர் வீரர்களுக்கு அது பெரிஅய் பலவீனமாக உள்ளது. இந்திய அணியின் பேட்டிங் எல்லா காலக்கட்டத்திலுமே சிறப்பாகத்தான் இருந்திருக்கிறது. இப்போது பவுலிங் வலுவடைந்திருப்பதுதான், இந்திய அணி ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகரமாக திகழ காரணம் என்றார் ரமீஸ் ராஜா.