SRH vs MI போட்டியை ரஜினி பார்த்திருந்தால் மகிழ்ச்சி என்றிருப்பார் – டிரெண்டாகும் ரஜினி வீடியோ!

ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி ஐபிஎல், காவ்யா மாறன் பற்றி பேசிய வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

Rajinikanth Talk about IPL, SRH Team and Kavya Maran's Expressions in Jailer Audio Launch Video trending in Social Media after SRH Scored 277 Runs in IPL History rsk

ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவின் போது ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் கொஞ்சம் நல்ல வீரர்களை வாங்கி போடுங்க. காவ்யா மாறன் ரியாக்‌ஷனை பார்த்தாலே நமக்கு டென்ஷனாகுது. காவ்யாவ பார்க்கும் போது நமக்கு பிபி ஏறுது என்பது போன்று பேசியிருந்தார். இப்போது மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியை ரஜினிகாந்த் பார்த்திருந்தால் நிச்சயமாக பெருமையாக உணர்ந்திருப்பார். நாம், அன்று ஒரு வார்த்தை சொன்னோம், இப்போது அது நடந்திருக்கிறது என்று உணர்ந்திருப்பார்.

 

மரண அடியை திருப்பி கொடுத்த திலக் வர்மா – கடைசில 31 ரன்னில் தோல்வி அடைந்த மும்பை இந்தியன்ஸ்!

மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான 8ஆவது லீக் போட்டி ஹைதராபாத்தில் இன்று நடந்தது. இதில், முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது அதிரடியாக விளையாடி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்கள் குவித்து ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை படைத்துள்ளது.

அடிச்ச அடில, கேப்டன் பொறுப்ப ரோகித்திடம் கொடுத்துட்டு பவுண்டரி லைனுக்கு ஓடிய பாண்டியா – வைரலாகும் வீடியோ!

இதையடுத்து பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியானது 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக திலக் வர்மா மட்டுமே 64 ரன்கள் எடுத்தார். இஷான் கிஷான் 13 பந்துகளில் 4 சிக்ஸர், 2 பவுண்டரி உள்பட 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா 26 ரன்களில் நடையை கட்டினார். அதன் பிறகு நமன் திர் மற்றும் திலக் வர்மா இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடினர். இதில், நமன் திர் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய திலக் வர்மா 34 பந்துகளில் 2 பவுண்டரி 6 சிக்சர் உள்பட 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

SRHக்காக ஐபிஎல் சரித்திரத்தை மாற்றி அமைத்த டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ஹென்ரிச் கிளாசென்!

 

 

ஹர்திக் பாண்டியா 24 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசியாக மும்பை இந்தியன்ஸ் வெற்றிக்கு 12 ஓவரில் 54 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், 19ஆவது ஓவரில் 7 ரன்கள் எடுத்த நிலையில் கடைசி ஓவரில் 15 ரன்கள் மட்டுமே எடுத்தது. இறுதியாக மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 246 ரன்கள் மட்டுமே எடுத்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலமாக மும்பை விளையாடிய 2 போட்டியிலும் தோல்வியை தழுவியுள்ளது. இந்தப் போட்டியின் மூலமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. ஹைதராபாத் அணியில் ஜெயதேவ் உனத்கட் மற்றும் பேட் கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். ஷாபாஸ் அகமது ஒரு விக்கெட் எடுத்தார்.

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios