Asianet News TamilAsianet News Tamil

மரண அடியை திருப்பி கொடுத்த திலக் வர்மா – கடைசில 31 ரன்னில் தோல்வி அடைந்த மும்பை இந்தியன்ஸ்!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான 8ஆது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியானது 31 ரன்களில் தோல்வி அடைந்துள்ளது.

Sunrisers Hyderabad beat Mumbai Indians by 31 runs difference in 8th IPL Match at Hyderabad rsk
Author
First Published Mar 28, 2024, 12:03 AM IST

மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான 8ஆவது லீக் போட்டி ஹைதராபாத்தில் இன்று நடந்தது. இதில், முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது அதிரடியாக விளையாடி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்கள் குவித்து ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை சன்ரைசர்ஸ் அணி படைத்துள்ளது. இதில், அதிகபட்சமாக ஹென்ரிச் கிளாசென் 80*, அபிஷேக் சர்மா 63 ரன்னும், டிராவிஸ் ஹெட் 62 ரன்னும் எடுத்தனர்.

அடிச்ச அடில, கேப்டன் பொறுப்ப ரோகித்திடம் கொடுத்துட்டு பவுண்டரி லைனுக்கு ஓடிய பாண்டியா – வைரலாகும் வீடியோ!

பின்னர், 278 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷான் களமிறங்கினர். இந்தப் போட்டி மும்பை அணியில் ரோகித் சர்மாவின் 200ஆவது ஐபிஎல் போட்டி. தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக விளையாடினர். இதில், இஷான் கிஷான் 13 பந்துகளில் 4 சிக்ஸர், 2 பவுண்டரி உள்பட 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

SRHக்காக ஐபிஎல் சரித்திரத்தை மாற்றி அமைத்த டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ஹென்ரிச் கிளாசென்!

ரோகித் சர்மா 26 ரன்களில் நடையை கட்டினார். அதன் பிறகு நமன் திர் மற்றும் திலக் வர்மா இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடினர். இதில், நமன் திர் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய திலக் வர்மா 34 பந்துகளில் 2 பவுண்டரி 6 சிக்சர் உள்பட 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 10 ஓவருக்கு 2 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மும்பை இந்தியன்ஸும் 10 ஓவருக்கு 2 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் குவித்தது.

புதிய வரலாறு படைத்த SRH – 277 ரன்கள் குவித்து சாதனை – கண்ணீர்விட்டு அழாத குறையா அடிவாங்கிய MI!

அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா 24 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசியாக மும்பை இந்தியன்ஸ் வெற்றிக்கு 12 ஓவரில் 54 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், 19ஆவது ஓவரில் 7 ரன்கள் எடுத்த நிலையில் கடைசி ஓவரில் 15 ரன்கள் மட்டுமே எடுத்தது. இறுதியாக மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 246 ரன்கள் மட்டுமே எடுத்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலமாக மும்பை விளையாடிய 2 போட்டியிலும் தோல்வியை தழுவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

18, 16 பந்துகளில் போட்டி போட்டு அரைசதம் - மும்பை இந்தியன்ஸ் அஸ்திவாரத்தை ஆட்டி வைத்த ஹெட், அபிஷேக் சர்மா!

Follow Us:
Download App:
  • android
  • ios