லக்னோவில் வெற்றி யாருக்கு? டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பவுலிங்!
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான 44 ஆவது ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங் தேர்வு செய்தார்.
ஐபிஎல் 2024 தொடரின் 44ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் லக்னோ அணி பேட்டிங் செய்கிறது. இதற்கு முன்னதாக நடந்த 4 போட்டிகளில் ராஜஸ்தான் 3 போட்டியிலும், லக்னோ ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.
இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் விளையாடிய 8 போட்டிகளில் 7ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடத்திலுள்ளது. இதே போன்று லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் விளையாடிய 8 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ்:
யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்/கேப்டன்), ரோவ்மன் பவல், ஷிம்ரன் ஹெட்மயர், துருவ் ஜூரெல், ரவிச்சந்திரன் அஸ்வின், டிரெண்ட் போல்ட், ஆவேஷ் கான், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்:
குயீண்டன் டி காக், கேஎல் ராகுல் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், தீபக் கூடா, நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி, குர்ணல் பாண்டியா, மேட் ஹென்ரி, ரவி பிஷ்னோய், மோசின் கான், யாஷ் தாக்கூர்.