IPL 2023: KKR vs RR டாஸ் ரிப்போர்ட்..! ஜெயிச்சே தீரணும்.. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 2 அதிரடி மாற்றங்கள்
கேகேஆருக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
ஐபிஎல் 16வது சீசன் சுவாரஸ்யமான கட்டத்தில் உள்ளது. 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் 15 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் இருக்கும் சிஎஸ்கே ஆகிய 2 அணிகளும் பிளே ஆஃபிற்கு முன்னேறுவது உறுதி.
எஞ்சிய 2 இடங்களுக்கு சன்ரைசர்ஸ் மற்றும் டெல்லியை தவிர மற்ற 6 அணிகளும் கடுமையாக போட்டி போட்டுவருகின்றன. எனவே ஒவ்வொரு போட்டியும் முக்கியமான போட்டி ஆகும்.
தலா 11 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கேகேஆர் அணிகள் இன்றைய போட்டியில் மோதுகின்றன.இந்த 2 அணிகளுக்குமே வெற்றி கண்டிப்பாக தேவை. வெற்றி கட்டாயத்துடன் இரு அணிகளும் மோதுவதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும். கொல்கத்தா ஈடன் கார்டனில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
IPL 2023: விராட் கோலியா ரோஹித் சர்மாவா..? தீபக் சாஹரி நச் பதில்
கடந்த சில போட்டிகளில் முதலில் பேட்டிங் ஆடி தோல்வியை தழுவியதால் இந்த போட்டியில் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன். இந்த போட்டிக்கான ராஜஸ்தான் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குல்திப் சென்னுக்கு பதிலாக டிரெண்ட் போல்ட்டும், முருகன் அஷ்வினுக்கு பதிலாக கேஎம் ஆசிஃபும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கேகேஆர் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. வைபவ் அரோரா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அனுகுல் ராய் சேர்க்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:
யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ஜோ ரூட், த்ருவ் ஜுரெல், ஷிம்ரான் ஹெட்மயர், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், சந்தீப் ஷர்மா, கேஎம் ஆசிஃப், யுஸ்வேந்திர சாஹல்.
கேகேஆர் அணி:
ரஹ்மானுல்லா குர்பாஸ், ஜேசன் ராய், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா (கேப்டன்), ஆண்ட்ரே ரசல், ரிங்கு சிங், சுனில் நரைன், ஷர்துல் தாகூர், அனுகுல் ராய், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி.