IPL 2023: RR vs SRH பலப்பரீட்சை..! முக்கியமான போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்
ஐபிஎல் 16வது சீசனில் இன்றிரவு நடக்கும் போட்டியில் களமிறங்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
ஐபிஎல் 16வது சீசன் சுவாரஸ்யமான கட்டத்தில் உள்ளது. இனிவரும் ஒவ்வொரு போட்டியும் அனைத்து அணிகளுக்குமே முக்கியம். ஆரம்பத்தில் வெற்றீகளுடன் தொடங்கி, கடந்த சில போட்டிகளில் தோல்விகளாக தழுவிவரும் நிலையில், இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சன்ரைசர்ஸை எதிர்கொள்கிறது.
14 புள்ளிகளுடன் குஜராத் அணி முதலிடத்திலும், 13 புள்ளிகளுடன் சிஎஸ்கே அணி 2ம் இடத்திலும் உள்ள நிலையில், ராஜஸ்தான், மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் தலா 10 புள்ளிகளுடன் இருப்பதால் இனிவரும் ஒவ்வொரு போட்டியிலும் இந்த அணிகள் வெற்றி பெற்றாக வேண்டும். அதனால் அனைத்து போட்டிகளுமே முக்கியம்.
IPL 2023: 13 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை மண்ணில் மும்பை அணியை வீழ்த்தி சிஎஸ்கே அபார வெற்றி
இன்று இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் நடக்கும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
உத்தேச ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:
ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ஷிம்ரான் ஹெட்மயர், த்ருவ் ஜுரெல், ஆடம் ஸாம்பா, ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், டிரெண்ட் போல்ட், சந்தீப் ஷர்மா.
IPL 2023: குஜராத்துக்கு எதிரான தோல்வி.. ராஜஸ்தான் பேட்ஸ்மேன்களை செம காட்டு காட்டிய சங்கக்கரா
உத்தேச சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:
அபிஷேக் ஷர்மா, மயன்க் அகர்வால், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஹாரி ப்ரூக், ஹென்ரிச் கிளாசன், அப்துல் சமாத், மார்கோ யான்சென், புவனேஷ்வர் குமார், மயன்க் மார்கண்டே, கார்த்திக் தியாகி.