அப்பாவுக்கு தப்பாத புள்ள: விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் -யு14ல் கர்நாடகா அணிக்கு கேப்டனான ராகுல் டிராவிட் மகன்!
14 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் கர்நாடகா அணியின் கேப்டனாக ராகுல் டிராவிட்டின் மகன் அன்வே டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 1973 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் பிறந்த ராகுல் சரத் டிராவிட் கிரிக்கெட்டில் தி வால், தி கிரேட் வால், ஜம்மி, மிஸ்டர் டிபெண்டபிள் என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறார். சிறந்த பேட்ஸ்மேன் மட்டுமின்றி பகுதி நேர விக்கெட் கீப்பராகவும் திகழ்ந்துள்ளார்.
அதுமட்டுமின்றி இந்திய கிரிக்கெட் அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். தற்போது அவரைப் போன்றே அவரது மகன் அன்வே டிராவிட்டும் விக்கெட் கீப்பராக இருப்பது மட்டுமின்றி சிறந்த பேட்ஸ்மேனகாவும் இருக்கிறார். இந்த நிலையில் தான் 14 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட்டில் கர்நாடகா அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
Gabba Test: வரலாற்று வெற்றியை பதிவு செய்த இந்தியா: நினைவு கூர்ந்து டுவிட்டரில் வாழ்த்து!
மண்டலங்களுக்கு இடையிலான போட்டிக்கு கர்நாடகா அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் போட்டி வரும் 23 ஆம் தேதி முதல் பிப்ரவரி 11 ஆம் தேதி வரையில் கேரளாவில் நடக்கிறது. அன்வேக்கு, சமித் டிராவிட் ஒரு சகோதரன் இருக்கிறான். சமித்தும் ஒரு பேட்ஸ்மேன் தான். மண்டலப் போட்டியில் சமித் மற்றும் அன்வே டிராவிட் இருவரும் இணைந்து பிடிஆர் ஷீல்டு 14 வயதுக்கு உட்பட்டோருக்கான பள்ளி அளவில் நடந்த போட்டியில் 200 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் சேர்த்தனர். இதில் அன்வே 90 ரன்கள் சேர்த்தார். இதன் காரணமாக அந்த அணி அரையிறுதிப் போட்டிக்குள் நுழைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வளவு அதிக ஸ்கோர் கொண்ட ஒரு போட்டியை ஹைதராபாத் பார்த்ததில்லை: முகமது அசாருதீன்!
குட்லக் டீம் இந்தியா: ராய்பூரில் உற்சாக வரவேற்பு: வீரர்களைக் கண்டு துள்ளிக் குதித்த ரசிகர்கள்!