Asianet News TamilAsianet News Tamil

பொறுமையாகத்தான் இருக்க வேண்டும்: தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்!

இந்திய அணியின் எதிர்கால நட்சத்திர வீரர்களை கண்டுபிடிக்கும் வரையில் பொறுமையாக இருக்க வேண்டும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

Rahul Dravid Says about his young t20 team against Sri Lanka series
Author
First Published Jan 6, 2023, 4:00 PM IST

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்று வருகிறது. முதலில் நடந்து வரும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும், சூர்யகுமார் யாதவ் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய கிரிக்கெட்டின் ஹீரோ: இளம் வயதில் உலகக் கோப்பையை கைப்பற்றிய கபில் தேவ் பிறந்த நாள் இன்று!

இதையடுத்து நடக்கும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது 3டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 2 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. முதல் டி20 போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்திலும், 2ஆவது டி20 போட்டியில் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று தொடரையும் 1-1 என்று சமநிலை செய்துள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான நேற்று நடந்த 2ஆவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது.

டி20 போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்த கேப்டன்களில் ரோகித் சர்மா நம்பர்!

இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது. இந்தியாவுக்கு எதிராக இலங்கை அணி 200 ரன்களுக்கு மேல் அடிப்பது இதுவே முதல் முறையாகும். இதைத் தொடர்ந்து 207 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி தான். தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற சூர்யகுமார் யாதவ் தன் பங்கிற்கு 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சுழற்பந்து வீச்சாளர் அக்‌ஷர் படேல் ஆக்ரோஷமாக ஆடி 31 பந்துகளில் 3 ஹாட்ரிக் சிக்சர்கள் உள்பட 6 சிக்சர்கள் 2 பவுண்டரிகள் உள்பட 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியாக இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இலங்கைக்கு எதிரான 2ஆவது டி20: இந்தியா செய்த மிஸ்டேக்ஸ் என்னென்ன தெரியுமா?

இந்த நிலையில், இந்த தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியிருப்பதாவது: யாரும் வேண்டுமென்று நோபால் வீசுவது கிடையாது. அப்படியிருக்கும் போது டி20 போட்டிகளில் நோபால் வீசுவது என்பது சரியான ஒன்று இல்லை. இந்த மாதிரி வீரர்களிடையே நாம் சற்று பொறுமையாகத்தான் இருக்க வேண்டும். அணியில் இளம் வீரர்கள் இடம் பெற்று விளையாடி வருகின்றனர். அவர்களுக்கு அனுபவம் என்று எதுவும் இல்லை. பந்து வீச்சில் எல்லா விதமான ஆதரவுகளையும் நாங்கள் கொடுக்கிறோம். வீரர்கள் அனைவரும் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்கிறார்கள். சர்வதேச போட்டிகளிலிருந்து கற்றுக் கொள்வதற்கு காலதாமதம் ஆகத்தான் செய்யும். இந்திய அணியின் எதிர்கால நட்சத்திர வீரர்களை கண்டுபிடிக்கும் வரையில் அனைவரும் சற்று பொறுமையாகத்தான் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

IND vs SL: காட்டடி அடித்து கடைசி வரை கடுமையாக போராடிய அக்ஸர் படேல்..! பரபரப்பான 2வது டி20யில் இலங்கை வெற்றி

Follow Us:
Download App:
  • android
  • ios