ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் , கேகேஆர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று நடந்தது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கேகேஅணி, கில் மற்றும் லின்னின் அதிரடியான தொடக்கம் மற்றும் ஆண்ட்ரே ரசலின் அதிரடியான ஃபினிஷங்கால் 20 ஓவர் முடிவில் 232 ரன்களை குவித்தது. 

233 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியாவை தவிர மற்ற யாருமே சரியாக ஆடவில்லை. ஹர்திக் பாண்டியா மட்டுமே தனி ஒருவனாக போராடி பார்த்தார். அவரும் 34 பந்துகளில் 91 ரன்களை குவித்து ஆட்டமிழக்க, 198 ரன்கள் அடித்து 34 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியடைந்தது. 

இந்த போட்டியில் கேகேஆர் அணியின் தொடக்க வீரர்கள் அபாரமாக ஆடினர். முதல் விக்கெட்டையே வீழ்த்த முடியாமல் மும்பை அணி திணறியது. ஃபாஸ்ட் பவுலிங், ஸ்பின் பவுலிங் என இரண்டையுமே அடித்து ஆடினர். மும்பை அணியின் நட்சத்திர பவுலராக உருவெடுத்துவரும் ரிஸ்ட் ஸ்பின்னர் ராகுல் சாஹரின் முதல் ஓவரில் கிறிஸ் லின் ஒரு பவுண்டரியும் சிக்ஸரும் விளாசினார். 

அதன்பின்னர் இரண்டாவது ஓவரை வீசிய ராகுல் சாஹர், வழக்கம்போல நேராக ஓடிவராமல் ஜிக் ஜாக்காக அம்பயருக்கு குறுக்கால் ஓடிவந்து பந்துவீசினார். பேட்ஸ்மேன்களின் கவனச்சிதறலுக்காக சில பவுலர்கள் இப்படி பந்துவீசுவதை வழக்கமாகவும் தங்களது ஸ்டைலாகவும் வைத்துள்ளனர். ஆனால் ராகுல் சாஹர் இதுவரை அப்படி வீசவில்லை என்றாலும், அதையும் ஒரு உத்தியாக பயன்படுத்தினார். அதன் விளைவாக லின்னின் விக்கெட்டையும் வீழ்த்தினார். அந்த வீடியோ இதோ..