டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் 3 தொடர்களிலும் எதிரணிகளை ஒயிட்வாஷ் செய்து 360 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 அணியாக திகழும் இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் படுமோசமாக சொதப்பியது. 

நியூசிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரில் 2-0 என ஒயிட்வாஷ் ஆனது. 2 போட்டிகளில் இந்திய அணி ஆடிய 4 இன்னிங்ஸ்களில் ஒன்றில் மட்டுமே 200 ரன்களை கடந்தது. மற்ற 3 இன்னிங்ஸ்களில் 200 ரன்களை கூட அடிக்கவில்லை. அந்தளவிற்கு மோசமாக ஆடியது. 

அணியின் சீனியர் வீரர்களான கோலி, ரஹானே, புஜாரா ஆகியோரே படுமோசமாக சொதப்பினர். எனவே இந்திய அணியின் மொத்த பேட்டிங் ஆர்டரும் சரிந்தது. இந்திய வீரர்கள் நியூசிலாந்தில் ஷார்ட் பிட்ச் பந்துகளை எதிர்கொள்ள திணறினர். நியூசிலாந்து ஃபாஸ்ட் பவுலர்கள் வீசிய ஷார்ட் பிட்ச் பந்துகளை திறம்பட எதிர்கொள்ள முடியாமல் விக்கெட்டுகளை இழந்தனர்.

இந்திய வீரர்கள் ஷார்ட் பிட்ச் பந்துகளை சரியாக கணிக்கமுடியாமல் திணறியதாக, நியூசிலாந்து ஃபாஸ்ட் பவுலர் கைல் ஜேமிசன் தெரிவித்திருந்தார். அதே கருத்தை பலரும் கூறி இந்திய வீரர்களை விமர்சித்திருந்தனர். 

இந்நிலையில், அந்த விமர்சனத்துக்கு ரஹானே பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய ரஹானே, ஷார்ட் பந்துகளை சரியாக ஆடவில்லை என்று அதிகமாக பேசப்படுகிறது. கடந்த முறை ஆஸ்திரேலியாவிற்கு சென்றபோது, மெல்பர்னில் ஆடியபோது நாங்கள் தான்(இந்திய பேட்ஸ்மேன்கள்) ஆதிக்கம் செலுத்தினோம். ஷார்ட் பிட்ச் பந்துகளை நன்றாக ஆடத்தெரிந்தவர்கள் நாங்கள். ஒரு போட்டியில் சரியாக ஆடவில்லை என்பதற்காக ஷார்ட் பிட்ச் பந்துகளை ஆட தெரியாதவர்கள் ஆகமாட்டோம். 

நாங்க உங்களவிட மோசம்டா.. சவுராஷ்டிராவை அவங்க பாணியிலயே பழிதீர்க்கும் பெங்கால்

ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள அடுத்த தொடருக்கு, பாசிட்டிவான மனநிலையுடன் நாங்கள் எங்களை தயாராக வேண்டும். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை வெகுவாக எதிர்நோக்கியிருக்கிறோம். நியூசிலாந்து தொடரில் நிறைய கற்றுக்கொண்டோம். அவர்கள் அபாரமாக ஆடினார்கள் என்று ரஹானே தெரிவித்தார்.