நல்ல வீரர்களை தேர்வு செய்யணும்: காவ்யாவைப் பார்த்தால் வருத்தமாக இருக்கு: கலாநிதி மாறனுக்கு ரஜினிகாந்த் அட்வைஸ்
ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது பேசிய ரஜினிகாந்த், ஐபிஎல்லில் நல்ல வீரர்களை தேர்வு வேண்டும், காவ்யாவை டிவியில் பார்ப்பதற்கு கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சன் பிச்சர்ஸ் நிறுவனம், பிரமாண்ட தயாரித்துள்ள ஜெயிலர் படத்தின், இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது வருகிறது. இதில் இப்படத்தில் நடித்த நட்சத்திரங்கள் மற்றும் இப்படத்தில் பணியாற்றியுள்ள தொழில்நுட்ப கலைஞர்கள் என்று பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ரஜினிகாந்த், தளபதி விஜய்யைப் போன்று குட்டி கதை சொன்னார்.
ஜூன் 4 முதல் டி20 உலகக் கோப்பை: எந்தெந்த மைதானங்களில் நடக்கிறது தெரியுமா?
காக்கா, கழுகு கதையில் தொடங்கி அப்படியே ஐபிஎல் பக்கம் சென்றார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் கலாநிதி மாறன். அதுமட்டுமின்றி ஜெயிலர் படத்தின் தயாரிப்பாளரும் அவர் தான். ஆதலால், ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக கலாநிதி மாறன் நல்ல வீரர்களை தேர்வு செய்ய வேண்டும். அவரது மகள் காவ்யா மாறனை டிவியில் சோகமாக பார்ப்பதற்கு ரொம்பவும் வருத்தமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
ஏன் சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சனின் ஜெர்சியை அணிந்து விளையாடினார்? காரணத்தை வெளியிட்ட பிசிசிஐ!
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடந்து வரும் ஐபிஎல் தொடரில், ஒரு முறை மட்டுமே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சாம்பியனாகியுள்ளது. அதுவும் கடந்த 2016 ஆம் ஆண்டு சீசனை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கைப்பற்றியது. அதன் பிறகு ஒரு முறை கூட ஹைதராபாத் அணி டிராபியை கைப்பற்றவில்லை. நடந்து முடிந்த ஐபிஎல் 16ஆவது சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபத் அணி 14 போட்டிகளில் விளையாடி 4ல் மட்டுமே வெற்றி பெற்று, கடைசி இடம் பிடித்தது.
WI vs IND First ODI Live Score: சஞ்சு சாம்சனுடைய ஜெர்சியை அணிந்து வந்த சூர்யகுமார் யாதவ்!
ஒவ்வொரு போட்டி நடக்கும் போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முதன்மை நிர்வாக அதிகாரியான காவ்யா மாறனின் ரியாக்ஷன் மீடியா கவனத்தை ஈர்த்து ரசிகர்களின் விமர்சிக்க வைக்கும் அளவிற்கு இருந்தது. இதனை குறிப்பிட்டு பேசிய ரஜினிகாந்த், நல்ல வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
வரும் 2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில், அணியின் பயிற்சியாளரான பிரையன் லாராவை அணி நிர்வாகம் மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தி வெளியானது. அதே போன்று ஏராளமான மாற்றங்களை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி செய்து வருவதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணத்திற்கு பிறகு உத்தமராக வாழும் கிரிக்கெட் பிரபலங்கள் யார் யார் தெரியுமா?