Asianet News TamilAsianet News Tamil

இனிமேல் நீங்க வேலைக்கு ஆகமாட்டீங்க; அனில் கும்ப்ளேவை தூக்கி எறிந்த பஞ்சாப் கிங்ஸ்!புதிய பயிற்சியாளர் இவர்தான்

பஞ்சாப் கிங்ஸ் அணி தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவுடனான ஒப்பந்தத்தை முடித்துக்கொள்கிறது. புதிய பயிற்சியாளருக்கு மூவருக்கு இடையே போட்டி நிலவுகிறது.
 

punjab kings not to renew contract of anil kumbe as head coach for ipl 2023
Author
Chennai, First Published Aug 19, 2022, 8:34 PM IST

ஐபிஎல்லில் 15 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. மும்பை இந்தியன்ஸ்(5), சிஎஸ்கே (4) ஆகிய அணிகள் கோப்பைகளை வாரி குவித்துவரும் நிலையில், ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிடள்ஸ் ஆகிய அணிகள் ஐபிஎல் தொடங்கியதிலிருந்து விளையாடினாலும் ஒருமுறை கூட கோப்பையை வெல்ல முடியாமல் திணறிவருகின்றன.

ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் ஒவ்வொரு சீசனிலும் கோப்பையை வெல்லும் முனைப்பில் நிறைய மாற்றங்கள் செய்துவருகின்றன. அணி வீரர்கள், காம்பினேஷனில் மட்டுமல்லாது பயிற்சியாளர்களையும் தொடர்ச்சியாக மாற்றிவருகின்றனர். ஆனால் எதிர்பார்க்கும் ரிசல்ட் மட்டும் கிடைக்கவில்லை.

இதையும் படிங்க - நீங்க பண்றது எல்லாமே தப்புதான்! பிறகு எப்படி ஃபார்முக்கு வருவது? கோலியை செமயா விமர்சித்த பாக்., முன்னாள் வீரர்

பஞ்சாப் கிங்ஸ் அணியில் சேவாக்கிற்கு அடுத்து தலைமை பயிற்சியாளர் பதவியை ஏற்றவர் அனில் கும்ப்ளே. இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சுழல் ஜாம்பவானுமான அனில் கும்ப்ளே, 3 சீசன்களாக  பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்துவந்தார்.

அவரது பயிற்சியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் மீது அதிகமான எதிர்பார்ப்பு இருந்தது. அனில் கும்ப்ளே - கேஎல் ராகுல் ஜோடி மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கவில்லை. பஞ்சாப் அணி 2014 சீசனில் மட்டும் தான் ஃபைனலுக்கு முன்னேறியுள்ளது. அந்த சீசனிலும் பின் தகுதிச்சுற்றுக்கு கூட முன்னேறவில்லை.

அந்த அணியின் மோசமான ரெக்கார்டு தொடர்ந்துவரும் நிலையில், அனில் கும்ப்ளே மீது நிலவிய எதிர்பார்ப்பு அளவிற்கு அவரது செயல்பாடு இல்லை. இந்நிலையில், கடந்த சீசனுடன் அவரது பயிற்சியாளர் பதவிக்காலம் பஞ்சாப் அணியில் முடிவடைந்த நிலையில், அவரது பயிற்சிக்காலத்தை நீட்டிக்காமல் முடித்துக்கொள்ள முடிவெடுத்துள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி.

இதையும் படிங்க - ZIM vs IND: 2வது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்..! என்னென்ன மாற்றங்கள்..?

புதிய பயிற்சியாளராக இயன் மோர்கன், டிரெவர் பேலிஸ் மற்றும் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஒருவர் ஆகிய மூவரையும் அணுகியுள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி. இவர்களில் ஒருவர் அடுத்த ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்படுவார்.

இங்கிலாந்து வெள்ளைப்பந்து அணிகளின் முன்னாள் கேப்டனும், ஐபிஎல்லில் கேகேஆர் அணியின் முன்னாள் கேப்டனுமான இயன் மோர்கன் அண்மையில் தான் அனைத்துவிதமான போட்டிகளிலிருந்தும் ஓய்வு அறிவித்தார். எனவே அவரும் பஞ்சாப் அணியின் பயிற்சியாளருக்கான போட்டியில் உள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios