IPL 2023: பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஸ்பின் பவுலிங் பயிற்சியாளராக முன்னாள் ஆர்சிபி வீரர் நியமனம்..!

ஐபிஎல் 16வது சீசனுக்கான பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஸ்பின் பவுலிங் பயிற்சியாளராக சுனில் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.
 

punjab kings appoints sunil joshi as spin bowling coach for ipl 2023

ஐபிஎல்லில் 15 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில், 16வது சீசன் இந்த ஆண்டு நடக்கவுள்ளது. இந்த சீசனுக்கான ஏலம் கடந்த டிசம்பர் 23ம் தேதி நடந்தது.  அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் எடுத்தன.

இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றிராத ஆர்சிபி, டெல்லி கேபிடள்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய 3 அணிகளும் ஒவ்வொரு சீசனிலும் கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கி தோல்வியுடன் வெளியேறி ஏமாற்றமடைகின்றன.

சச்சின் டெண்டுல்கர் 100 சத சாதனையை முறியடிக்க கோலி என்ன செய்யணும்..? கவாஸ்கர் அதிரடி ஆலோசனை

அதனால் ஒவ்வொரு சீசனிலும் புதிய வீரர்களை எடுப்பது, புதிய பயிற்சியாளர்களை நியமிப்பது என பல மாற்றங்களை தொடர்ச்சியாக செய்துவருகின்றன. அதுவே அந்த அணிகளுக்கு பின்னடைவாகவும் அமைகிறது. அப்படித்தான் பஞ்சாப் கிங்ஸ் அணியும் பின்னடைவை சந்தித்துவருகிறது.

வீரேந்திர சேவாக்கின் பயிற்சி திருப்தியளிக்காமல் அனில் கும்ப்ளேவை பயிற்சியாளராக நியமித்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. ஆனால் கும்ப்ளேவின் பயிற்சிக்காலத்திலும் பஞ்சாப் அணி சோபிக்கவில்லை. அதன்விளைவாக, அவரும் நீக்கப்பட்டு, ஆஸ்திரேலியாவின் டிரெவர் பேலிஸ் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். 

இந்நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஸ்பின் பவுலிங் பயிற்சியாளராக, இந்திய அணியின் முன்னாள் ஸ்பின்னர் சுனில் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். இடது கை ஸ்பின்னரான சுனில் ஜோஷி 1996லிருந்து 2001ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக 15 சர்வதேச டெஸ்ட் மற்றும் 69 ஒருநாள் போட்டிகளில் ஆடி மொத்தம் 110 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008ம் ஆண்டு முதல் சீசனில் ஆர்சிபி அணிக்காக ஆடிய சுனில் ஜோஷி, 2012ம் ஆண்டு அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு அறிவித்தார்.

IND vs NZ: ஒருநாள் தொடரிலிருந்து ஷ்ரேயாஸ் ஐயர் விலகல்..! மாற்று வீரர் அறிவிப்பு

ஐபிஎல் வரலாற்றில் உச்சபட்ச தொகையான ரூ.18.5 கோடி கொடுத்து சாம் கரனை எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்படக்கூடிய சாம் கரன், டி20 உலக கோப்பையை இங்கிலாந்து வெல்ல காரணமாக இருந்து தொடர் நாயகன் விருதையும் வென்ற சாம் கரனுக்காக ஏலத்தில் அணிகள் அடித்துக்கொண்டன. கடைசியில் பஞ்சாப் அணி, ரூ.18.5 கோடிக்கு சாம் கரனை எடுத்தது.  பஞ்சாப் கிங்ஸ் அணி இம்முறை தவான் கேப்டன்சியில், ஜானி பேர்ஸ்டோ, லியாம் லிவிங்ஸ்டோன், ஜித்தேஷ் ஷர்மா, ஷாருக்கான், சாம் கரன், ரபாடா, அர்ஷ்தீப் சிங் என வலுவான சிறந்த வீரர்களை கொண்ட வலுவான அணியாக உள்ளது.

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios