IND vs NZ: ஒருநாள் தொடரிலிருந்து ஷ்ரேயாஸ் ஐயர் விலகல்..! மாற்று வீரர் அறிவிப்பு
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக ஷ்ரேயாஸ் ஐயர் விலகினார். அவருக்கு மாற்று வீரராக ரஜத் பட்டிதார் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி ஒருநாள் உலக கோப்பைக்காக தீவிரமாக தயாராகிவருகிறது. ஒருநாள் உலக கோப்பைக்காக 20 வீரர்களை ஷார்ட்லிஸ்ட் செய்தது பிசிசிஐ. அந்த வீரர்கள் ஒருநாள் உலக கோப்பைக்கு முன் நடக்கும் அனைத்து ஒருநாள் போட்டிகளிலும் சுழற்சி முறையில் களமிறக்கப்படுகின்றனர்.
இந்திய ஒருநாள் அணியில் தனக்கான நிரந்தர இடத்தை பிடித்துவிட்டார் ஷ்ரேயாஸ் ஐயர். 4ம் வரிசை வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் தான் என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது. கடைசியாக நடந்த வங்கதேசம் மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிரான 2 ஒருநாள் தொடர்களிலும் ஷ்ரேயாஸ் ஐயர் மிடில் ஆர்டரில் சிறப்பான பங்களிப்பு செய்தார்.
டி20 அணியில் சூர்யகுமார் யாதவ் 4ம் வரிசையை பிடித்திருந்தாலும், ஒருநாள் அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் தான் 4ம் வரிசை வீரர். இந்திய ஒருநாள் அணியின் நட்சத்திர வீரராக உருவெடுத்துவிட்ட ஷ்ரேயாஸ் ஐயர், காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நாளை தொடங்குகிறது. நாளை முதல் போட்டி ஹைதராபாத்தில் நடக்கிறது. இந்நிலையில், முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக ஷ்ரேயாஸ் ஐயர் ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளார். ஷ்ரேயாஸ் ஐயருக்கு மாற்று வீரராக ரஜத் பட்டிதார் அறிவிக்கப்பட்டுள்ளார்.
மீண்டும் மீண்டும் புறக்கணிக்கப்படும் ரோஹித், கோலி..! பிசிசிஐ கள்ள மௌனம்
ஷ்ரேயாஸ் ஐயர் ஆடாதது இந்திய அணிக்கு பின்னடைவுதான். ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக ரஜத் பட்டிதார் அணியில் சேர்க்கப்பட்டாலும், அவருக்கு பதிலாக ஆடும் லெவனில் சூர்யகுமார் யாதவ் தான் ஆடுவார்.
இந்திய ஒருநாள் அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஷர்துல் தாகூர், ஸ்ரீகர் பரத், ஷபாஸ் அகமது, ரஜத் பட்டிதார்.