IPL 2023: பஞ்சாப் கிங்ஸ் அணியில் களமிறங்கும் மிரட்டல் ஃபாஸ்ட் பவுலர்! குஜராத் அணியில் ஹர்திக் பாண்டியா கம்பேக்
ஐபிஎல் 16வது சீசனின் இன்றைய போட்டியில் களமிறங்கும் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இந்த சீசனில் நன்றாக ஆடிவரும் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.
முதல் 2 போட்டிகளில் ஜெயித்த 2 அணிகளுமே 3வது போட்டியில் தோற்றதால், இன்று மொஹாலியில் நடக்கும் போட்டியில் இரு அணிகளும் வெற்றி முனைப்பில் களமிறங்குகின்றன.
இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். பஞ்சாப் கிங்ஸ் அணியில் ககிசோ ரபாடா இணைந்துவிட்டதால், நேதன் எல்லிஸுக்கு பதிலாக ரபாடா களமிறக்கப்படுவார். 150 கிமீ வேகத்தில் வீசும் மிரட்டல் ஃபாஸ்ட் பவுலரான ரபாடாவின் இணைந்து பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பலம் சேர்க்கும்.
குஜராத் டைட்டன்ஸ் அணியில் கடந்த போட்டியில் ஆடாத கேப்டன் ஹர்திக் பாண்டியா இந்த போட்டியில் ஆடுவது அந்த அணியின் பேலன்ஸை பலப்படுத்தும்.
உத்தேச பஞ்சாப் கிங்ஸ் அணி:
பிரப்சிம்ரன் சிங், ஷிகர் தவான் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜித்தேஷ் ஷர்மா, சிக்கந்தர் ராஸா, சாம் கரன், ஷாருக்கான், ஹர்ப்ரீத் பிரார், ராகுல் சாஹர், ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங்.
IPL 2023: முழங்கால் காயத்தால் அவதிப்படும் தோனி..! தென்னாப்பிரிக்க வீரர் 2 வாரம் விலகல்
உத்தேச குஜராத் டைட்டன்ஸ் அணி:
ரிதிமான் சஹா, ஷுப்மன் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), விஜய் சங்கர், டேவிட் மில்லர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், முகமது ஷமி, அல்ஸாரி ஜோசஃப், ஜோஷுவா லிட்டில்.