PSL 2023: கோப்பை யாருக்கு..? ஃபைனலில் முல்தான் - லாகூர் அணிகள் பலப்பரீட்சை..! டாஸ் ரிப்போர்ட்
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் ஃபைனலில் முல்தான் சுல்தான்ஸுக்கு எதிராக டாஸ் வென்ற லாகூர் காலண்டர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் தகுதிப்போட்டியில் லாகூரை வீழ்த்தி முல்தான் சுல்தான்ஸ் அணி நேரடியாக ஃபைனலுக்கு முன்னேறியது.
எலிமினேட்டரில் இஸ்லாமாபாத் அணியை வீழ்த்திய பெஷாவர் ஸால்மி அணியும், தகுதிப்போட்டியில் தோற்ற லாகூர் காலண்டர்ஸும் 2வது எலிமினேட்டரில் மோதின. 2வது எலிமினேட்டரில் பெஷாவர் ஸால்மியை வீழ்த்தி லாகூர் காலண்டர்ஸ் ஃபைனலுக்கு முன்னேறியது.
லாகூரில் இன்று நடக்கும் ஃபைனலில் முல்தான் சுல்தான்ஸ் - லாகூர் காலண்டர்ஸ் அணிகள் மோதுகின்றன. கோப்பைக்கான இந்த ஃபைனலில் டாஸ் வென்ற லாகூர் காலண்டர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
லாகூர் காலண்டர்ஸ் அணி:
மிர்சா தாஹிர் பைக், ஃபகர் ஜமான், அப்துல்லா ஷாஃபிக், சாம் பில்லிங்ஸ் (விக்கெட் கீப்பர்), அசான் பட்டி, சிக்கந்தர் ராசா, டேவிட் வீஸ், ரஷீத் கான், ஷாஹீன் அஃப்ரிடி (கேப்டன்), ஹாரிஸ் ராஃப், ஜமான் கான்.
முல்தான் சுல்தான்ஸ் அணி:
உஸ்மான் கான், முகமது ரிஸ்வான் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரைலீ ரூசோ, கைரன் பொல்லார்டு, டிம் டேவிட், குஷ்தில் ஷா, அன்வர் அலி, உசாமா மிர், அப்பாஸ் அஃப்ரிடி, ஷெல்டான் காட்ரெல், ஈசானுல்லா.