பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பெஷாவர் ஸால்மிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய லாகூர் காலண்டர்ஸ் அணி, ஃபகர் ஜமான் மற்றும் அப்துல்லா ஷாஃபிக்கின் அபாரமான பேட்டிங்கால் 20 ஓவரில் 241 ரன்களை குவித்து, 242 ரன்கள் என்ற மிகக்கடின இலக்கை பெஷாவர் ஸால்மிக்கு நிர்ணயித்துள்ளது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. லாகூரில் நடந்துவரும் போட்டியில் லாகூர் காலண்டர்ஸ் மற்றும் பெஷாவர் ஸால்மி அணிகள் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற லாகூர் காலண்டர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
லாகூர் காலண்டர்ஸ் அணி:
மிர்ஸா தாஹிர் பைக், ஃபகர் ஜமான், சாம் பில்லிங்ஸ் (விக்கெட் கீப்பர்), அப்துல்லா ஷாஃபிக், ஹுசைன் டலட், சிக்கந்தர் ராஸா, ரஷீத் கான், டேவிட் வீஸ், ஷஹின் அஃப்ரிடி (கேப்டன்), ஹாரிஸ் ராஃப், ஜமான் கான்.
பெஷாவர் ஸால்மி அணி:
முகமது ஹாரிஸ் (விக்கெட் கீப்பர்), பாபர் அசாம் (கேப்டன்), சயிம் அயுப், டாம் கோலர் காட்மோர், பானுகா ராஜபக்சா, ரோவ்மன் பவல், ஜேம்ஸ் நீஷம், வஹாப் ரியாஸ், சாத் மசூத், சல்மான் இர்ஷாத், அர்ஷத் இக்பால்.
முதலில் பேட்டிங் ஆடிய லாகூர் காலண்டர்ஸ் அணியின் தொடக்க வீரர் மிர்ஸா 5 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரர் ஃபகர் ஜமானும், 3ம் வரிசையில் இறங்கிய அப்துல்லா ஷாஃபிக்கும் இணைந்து அதிரடியாக ஆடி இருவருமே அரைசதம் அடித்து, 2வது விக்கெட்டுக்கு 120 ரன்களை குவித்தனர். அதிரடியாக ஆடிய அப்துல்லா ஷாஃபிக் 41 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 75 ரன்கள் அடித்தார்.
IND vs AUS: ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு முட்டு கொடுக்கும் மேக்ஸ்வெல்..!
லாகூரில் சிக்ஸர் மழை பொழிந்து சதத்தை நெருங்கிய ஃபகர் ஜமான் 45 பந்தில் 96 ரன்கள் அடித்திருந்த நிலையில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். 45 பந்தில் 10 சிக்ஸர்களை விளாசி 96 ரன்களை குவித்தார் ஃபகர் ஜமான். சாம் பில்லிங்ஸ் 23 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 47 ரன்களை விளாச, 20 ஓவரில் 241 ரன்களை குவித்த லாகூர் அணி, 242 ரன்கள் என்ற மிகக்கடின இலக்கை பெஷாவர் ஸால்மி அணிக்கு நிர்ணயித்துள்ளது.
