IND vs AUS: ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு முட்டு கொடுக்கும் மேக்ஸ்வெல்..!

இந்தியாவிற்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் படுதோல்வியடைந்த ஆஸ்திரேலிய அணி கடும் விமர்சனத்துக்குள்ளான நிலையில், அந்த அணிக்கு ஆதரவாக பேசியுள்ளார் க்ளென் மேக்ஸ்வெல்.
 

glenn maxwell backs australia team fight well against india except one session in first test matches

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. இந்த தொடர் கடுமையான போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆஸ்திரேலிய அணி அந்தளவிற்கு ஆடவில்லை. முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியாவிடம் மண்டியிட்டு சரணடைந்து படுதோல்விகளை அடைந்து, இந்த தொடரை வெல்லும் வாய்ப்பை இழந்துவிட்டது. இப்போது, அந்த அணி ஒயிட்வாஷ் ஆகாமல் தடுக்க போராட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

ஸ்பின்னிற்கு சாதகமான இந்திய ஆடுகளங்களில் டெஸ்ட் போட்டிகளில் ஜெயிக்க ஸ்பின் தான் முக்கியமான அஸ்திரம் என்பதை உணர்ந்து நேதன் லயன், டாட் மர்ஃபி, குன்னெமன், அஷ்டான் அகர் என 4 ஸ்பின்னர்களுடன் இந்தியாவிற்கு வந்த ஆஸ்திரேலிய அணி, முதல் டெஸ்ட்டில் அணி தேர்வில் தவறிழைத்துவிட்டது. 2வது டெஸ்ட்டில் அந்த அணியின் ஸ்பின்னர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஸ்பின்னை பயன்படுத்துவதில் ஓரளவிற்கு தேறிய ஆஸ்திரேலிய அணி, இந்திய ஸ்பின்னர்களை எதிர்கொள்வதில் கோட்டைவிட்டது.

மைக் டைசன் கூற்றை சுட்டிக்காட்டி ஆஸ்திரேலிய அணிக்கு பவர்ஃபுல் பன்ச் கொடுத்த கிரேக் சேப்பல்..!

முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி தோல்வியடைந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியின் வியூகங்கள், ஆஸ்திரேலிய வீரர்களின் ஆட்டம், அணி தேர்வு ஆகியவை கடும் விமர்சனத்துக்குள்ளானது. முன்னாள் வீரர்கள் பலரும் ஆஸ்திரேலிய அணியை விமர்சித்த நிலையில், க்ளென் மேக்ஸ்வெல் ஆஸ்திரேலிய அணி நன்றாக ஃபைட் செய்ததாக ஆதரவுக்குரல் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து பேசிய க்ளென் மேக்ஸ்வெல், ஆஸ்திரேலிய வீரர்கள் கடுமையாக போராடினார்கள் என்றே நினைக்கிறேன். ஒரேயொரு செசனில் சரியாக ஆடாததை வைத்து விமர்சிக்கக்கூடாது. இந்தியாவில் ஆடுவது எளிதல்ல; மிகக்கடினம். ஆஸ்திரேலியாவிற்கு ஆடுவதற்கு சவாலான கண்டிஷன் இந்தியா. 2 தருணங்களை தவிர மற்றபடி கடுமையாக போராடினோம் என்றுதான் நினைக்கிறேன். இந்தியாவுடன் நிறைய ஆடியிருக்கிறோம். இந்திய வீரர்கள் செம டஃப் ஃபைட் கொடுப்பார்கள். 

நீங்களும் தான் பேட்டிங் ஆடுறீங்க! ரோஹித் சர்மா ஆடுறத பார்த்து கத்துக்கங்க! ஆஸி., வீரர்களுக்கு மைக் ஹசி அட்வைஸ்

டெல்லியில் நடந்த 2வது டெஸ்ட்டில் 3ம் நாள் ஆட்டம் தொடங்கும்போது நல்ல நிலையில் தான் இருந்தோம். ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தும்போது அந்த முமெண்ட்டை விட்டுவிடாமல் அப்போது தான் சரியான விஷயங்களை செய்ய வேண்டும். நீண்டநேரம் சரியாக ஆடவேண்டும். அதை செய்ய தவறிவிட்டோம் என்றார் மேக்ஸ்வெல்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios