அயர்லாந்து அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. 3 போட்டிகளும் சவுத்தாம்ப்டனில் தான் நடக்கின்றன. நேற்று நடந்த முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

2வது போட்டி நாளை நடக்கவுள்ளது. அந்த போட்டியில் களமிறங்கும் உத்தேச இங்கிலாந்து அணியை பார்ப்போம். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டியில் ஆடிய இங்கிலாந்து அணி, அடுத்ததாக ஆகஸ்ட் 5ம் தேதி முதல் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் ஆடுகிறது. அதனால் அணியின் நட்சத்திர வீரர்களான ஜோ ரூட், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டது. 

டேவிட் வில்லி, ஜேம்ஸ் வின்ஸ், ரீஸ் டாப்ளி ஆகிய அணியில் ஓராண்டுக்கு மேலாக ஆடிராத வீரர்களுக்கு இந்த தொடரில் வாய்ப்பளிக்கப்பட்டது. முதல் போட்டியில் டேவிட் வில்லி 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். ஒருநாள் கிரிக்கெட்டில் வில்லி, முதல் முறையாக ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சாம் பில்லிங்ஸ் அரைசதம் அடித்தார். 

டாம் கரன், மஹ்மூத் ஆகியோரும் நன்றாக பந்துவீசினர். ஸ்பின்னர்கள் மொயின் அலி மற்றும் அடில் ரஷீத். தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் மற்றும் பேர்ஸ்டோ. அடுத்தது ஜேம்ஸ் வின்ஸ், அதன்பின்னர் டாம் பாண்ட்டன் மற்றும் கேப்டன் மோர்கன். இந்த அணியின் காம்பினேஷனை இரண்டாவது போட்டியில் மாற்ற வேண்டிய அவசியமில்லை. எனவே அயர்லாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் முதல் போட்டியில் ஆடிய அதே இங்கிலாந்து அணி தான் ஆடும். அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. 

2வது ஒருநாள் போட்டிக்கான உத்தேச இங்கிலாந்து அணி:

ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜேம்ஸ் வின்ஸ், இயன் மோர்கன்(கேப்டன்), டாம் பாண்ட்டன், சாம் பில்லிங்ஸ், மொயின் அலி, டேவிட் வில்லி, டாம் கரன், அடில் ரஷீத், மஹ்மூத்.