Asianet News TamilAsianet News Tamil

#IPL2021 ஒரே ஓவரில் 6 பவுண்டரிகள் அடித்து சாதனை படைத்த பிரித்வி ஷா! ஐபிஎல் வரலாற்றில் 2வது பேட்ஸ்மேன் பிரித்வி

கேகேஆருக்கு எதிராக 155 ரன்கள் என்ற இலக்கை விரட்ட தொடங்கிய டெல்லி கேபிடள்ஸ் அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா, ஷிவம் மாவி வீசிய முதல் ஓவரில் 6 பவுண்டரிகளை விளாசி சாதனை படைத்துள்ளார்.
 

prithvi shaw second batsman in ipl history that hits 6 boundaries in an over
Author
Ahmedabad, First Published Apr 29, 2021, 9:58 PM IST

டெல்லி கேபிடள்ஸ் மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையேயான போட்டி அகமதாபாத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட், கேகேஆரை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணி, ஆண்ட்ரே ரசலின் அதிரடியால்(27 பந்தில் 45 ரன்கள்) 20 ஓவரில் 154 ரன்கள் அடித்தது. கேகேஆர் அணியில் ரசல்(45), ஷுப்மன் கில்(43) ஆகிய இருவர் மட்டுமே ஓரளவிற்காவது ஸ்கோர் செய்தனர். மற்ற அனைவருமே சொதப்பியதன் விளைவாக வெறும் 154 ரன்கள் மட்டுமே அடித்தது கேகேஆர்.

155 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்ட தொடங்கிய டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு காட்டடி அடித்து மிகச்சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தார் பிரித்வி ஷா. ஷிவம் மாவி வீசிய முதல் ஓவரில் 6 பந்துகளையுமே பவுண்டரிக்கு விரட்டி சாதனை படைத்தார் பிரித்வி ஷா.

முதல் ஓவரின் முதல் பந்தை வைடாக வீசினார் மாவி. அதன்பின்னர் அந்த ஓவரில் வீசிய 6 பந்துகளையுமே பவுண்டரி விளாசிய பிரித்வி ஷா, பவர்ப்ளேயில் பவுண்டரிகளாக விளாச பவர்ப்ளே 6 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 67  ரன்களை குவித்தது டெல்லி கேபிடள்ஸ் அணி. அந்த 67 ரன்னில் 48 ரன்கள் பிரித்வி ஷா அடித்தது.

prithvi shaw second batsman in ipl history that hits 6 boundaries in an over

ஒரே ஓவரில் 6 பவுண்டரிகள் அடித்ததன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் ஒரு ஓவரில் 6 பவுண்டரிகள் அடித்த 2வது வீரர் என்ற சாதனையை பிரித்வி ஷா படைத்துள்ளார். பிரித்வி ஷாவுக்கு முன், 2012 ஐபிஎல்லில் ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் ஸ்ரீநாத் அரவிந்த் என்ற பவுலரின் ஒரே ஓவரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடிய அஜிங்க்யா ரஹானே 6 பவுண்டரிகளை அடித்தார். அதன்பின்னர் இந்த போட்டியில் பிரித்வி ஷா ஒரு ஓவரில் 6 பவுண்டரிகள் அடித்து சாதனை படைத்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios