இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 5 டி20,, 3 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகளில் ஆடவுள்ளது. அதற்கு முன்னதாக இந்தியா ஏ அணி நியூசிலாந்துக்கு சென்று நியூசிலாந்து ஏ அணியுடன் 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறது. 

இந்த தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, நியூசிலாந்து லெவன் அணிக்கும் இந்தியா ஏ அணிக்கும் இடையே 2 பயிற்சி ஒருநாள் போட்டிகள் நடக்கின்றன. இதன் முதல் போட்டியில் இந்தியா ஏ அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி இன்று நடந்துவருகிறது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா ஏ அணி, பிரித்வி ஷாவின் அதிரடியான சதத்தால் 50 ஓவரில்ம் 372 ரன்களை குவித்தது. பிரித்வி ஷா, ஒழுங்கீன நடவடிக்கை மற்றும் காயம் ஆகியவற்றின் காரணமாக தொடர்ச்சியாக கிரிக்கெட் ஆடாமல் இருந்துவருகிறார். காயம் காரணமாக அண்மையில் விலகிய பிரித்வி ஷா, காயத்தில் இருந்து மீண்டு, இந்தியா ஏ அணியில் இணைந்த நிலையில், இந்த போட்டியில் அடி வெளுத்தெடுத்திருக்கிறார்.

Also Read - தொடரை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி.. உத்தேச இந்திய அணி

தொடக்க வீரர்களாக பிரித்வி ஷாவும் மயன்க் அகர்வாலும் இறங்கினர். மயன்க் அகர்வால் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் வந்த கேப்டன் ஷுப்மன் கில் 24 ரன்களிலும் சூர்யகுமார் யாதவ் 26 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுமுனையில் நங்கூரமிட்டு அதிரடியாக ஆடி பவுண்டரிகளை விளாசி தள்ளிய பிரித்வி ஷா சதமடித்து அசத்தினார். 

சதத்திற்கு பின்னரும் நியூசிலாந்து பவுலர்களின் பவுலிங்கை பிரித்து மேய்ந்த பிரித்வி ஷா, 100 பந்தில் 150 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இஷான் கிஷான் 14 ரன்களில் வெளியேறினார். பிரித்வி ஷா ஆட்டமிழந்த பிறகு, அவர் விட்டுச்சென்ற பணியை தொடர்ந்த விஜய் சங்கர், அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். 41 பந்தில் 58 ரன்களை விளாசினார் விஜய் சங்கர். விஜய் சங்கரும் க்ருணல் பாண்டியாவும் ஆட்டமிழந்த பின்னர், பின்வரிசை வீரர்களும் அவுட்டானதால், 49.2 ஓவரில் இந்தியா ஏ அணி 372 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

Also Read - நீங்க பயப்படாதீங்க.. நாங்க என்ன செய்றோம்னு எங்களுக்கு நல்லா தெரியும்.. கேப்டன் கோலியின் மெசேஜ்

373 ரன்கள் என்ற இலக்குடன் நியூசிலாந்து லெவன் அணி ஆடிவருகிறது. அந்த அணியின் தொடக்க வீரர் ஜாக் போயல் அபாரமாக ஆடி சதமடித்ததுடன், வெறித்தனமாக இலக்கை விரட்டிவருகிறார்.