செல்ஃபி எடுக்க மறுத்த பிரித்வி ஷா கார் மீது தாக்குதல்..! போலீஸார் வழக்குப்பதிவு
அதிகமான செல்ஃபி எடுப்பதற்கு மறுப்பு தெரிவித்த இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா கார் மீது சிலர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா. 2018ம் ஆண்டு நடந்த அண்டர் 19 உலக கோப்பையை இந்திய அணிக்கு வென்று கொடுத்தவர். 2019ம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமானார். ஆனால் காயம் காரணமாக அவரால் தொடர்ச்சியாக இந்திய அணியில் ஆடமுடியாமல்போனதுடன், இந்திய டெஸ்ட் அணியில் தனக்கான இடத்தையும் இழந்தார்.
இந்திய அணிக்காக 5 டெஸ்ட், 9 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டிகளில் ஆடியிருக்கிறார். இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலமாக பார்க்கப்படும் வீரர் பிரித்வி ஷா. எதிர்காலத்தில் இந்திய அணியின் கேப்டன்சியையும் ஏற்க வாய்ப்புள்ள வீரர்.
பிரித்வி ஷா இன்று தனது நண்பருடன் மும்பையில் உள்ள விலா பார்லே ஹோட்டல் கிளப்பிற்கு சென்றுவிட்டு அங்கிருந்து வெளியேறியபோது, ரசிகர்கள் சிலர் அவருடன் செல்ஃபி எடுக்க கேட்டதையடுத்து, செல்ஃபிக்கு அனுமதியளித்து அவர்களுடன் போஸ் கொடுத்தார் பிரித்வி ஷா. ஆனால் ஒருசில செல்ஃபி எடுத்தபின்னரும், அவர்கள் மேலும் மேலும் செல்ஃபி எடுக்க விரும்பினர். அதற்கு பிரித்வி ஷா மறுப்பு தெரிவிக்க, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் அந்த ரசிகர்கள்.
இதையடுத்து அங்கு கூட்டம் கூடியதால், அவர்களுடன் பேசி வெளியே அனுப்பியது ஹோட்டர் நிர்வாகம். ஆனால் வெளியே சென்ற அவர்கள், ஹோட்டலுக்கு வெளியே காத்திருந்தனர். பிரித்வி ஷாவும் அவரது நண்பரும் வெளியே வந்தபின், பிரித்வி ஷா சென்ற கார் மீது தாக்குதல் பேஸ்பால் பேட், கம்பு ஆகியவற்றை வைத்து தாக்குதல் நடத்த பிரித்வி ஷா கார் கண்ணாடி உடைந்தது. இதையடுத்து காவல்நிலையத்திற்கு சென்று இதுதொடர்பாக புகார் அளித்தார் பிரித்வி ஷா.
100வது டெஸ்ட்டில் ஆடும் புஜாரா..! 100 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய இந்திய வீரர்கள் பட்டியல்
பிரித்வி ஷா அளித்த புகாரின் பேரில் அவரது கார் மீது தாக்குதல் நடத்திய 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.