100வது டெஸ்ட்டில் ஆடும் புஜாரா..! 100 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய இந்திய வீரர்கள் பட்டியல்
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியை தனது 100வது டெஸ்ட் போட்டியாக ஆடுகிறார் புஜாரா. புஜாரா 100 டெஸ்ட் போட்டியில் ஆடவுள்ள நிலையில், இந்தியாவிற்காக 100 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய வீரர்களின் பட்டியலை பார்ப்போம்.
இந்திய டெஸ்ட் அணியின் நட்சத்திர வீரர் புஜாரா. 2010ம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான புஜாரா, இந்திய அணியில் ராகுல் டிராவிட்டிற்கு பிறகு அவரது இடத்தை நிரப்பியவர் புஜாரா. இந்திய டெஸ்ட் அணியில் முக்கியமான 3ம் வரிசையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆடி அசத்திவரும் புஜாரா, இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 19 சதங்கள் மற்றும் 34 அரைசதங்களுடன் 7021 ரன்கள் அடித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பிப்ரவரி 17ம் தேதி டெல்லியில் தொடங்கும் டெஸ்ட் போட்டி புஜாராவின் 100வது டெஸ்ட் போட்டி. சர்வதேச டெஸ்ட்டில் 100 போட்டிகள் என்ற மைல்கல்லை எட்டும் 13வது இந்திய வீரர் என்ற சாதனையை புஜாரா படைக்கிறார். புஜாரா 100வது டெஸ்ட்டில் ஆடவுள்ள நிலையில், இதுவரை 100 டெஸ்ட்டில் ஆடியுள்ள இந்திய வீரர்களின் பட்டிய்லை பார்ப்போம்.
1. சச்சின் டெண்டுல்கர் -200 டெஸ்ட் போட்டிகள்
இந்த பட்டியலில் 200 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார்.
2. ராகுல் டிராவிட் - 163
சச்சின் டெண்டுல்கருடன் சமகாலத்தில் ஆடிய ராகுல் டிராவிட் 163 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 2ம் இடத்தில் உள்ளார்.
3. விவிஎஸ் லக்ஷ்மண் - 134 டெஸ்ட்
அதே காலக்கட்டத்தில் ஆடிய விவிஎஸ் லக்ஷ்மண் தான் 3ம் இடத்தில் உள்ளார்.
4. அனில் கும்ப்ளே - 132 டெஸ்ட்
இந்தியாவிற்காக 132 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 619 விக்கெட்டுகளை வீழ்த்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான கும்ப்ளே தான் 4ம் இடத்தில் உள்ளார்.
5. கபில் தேவ் - 131 டெஸ்ட்
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ். 1983ல் இந்தியாவிற்கு உலக கோப்பையை வென்று கொடுத்த கபில் தேவ், ஆல்டைம் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான கபில் தேவ், இந்த பட்டியலில் 5ம் இடத்தில் உள்ளார்.
6. சுனில் கவாஸ்கர் - 125 டெஸ்ட்
இந்தியாவின் முன்னாள் ஜாம்பவான் கிரிக்கெட்டர் சுனில் கவாஸ்கர் இந்தியாவிற்காக 125 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார்.
7. திலிப் வெங்சர்க்கார் - 116 டெஸ்ட்
இந்திய முன்னாள் வீரர் திலிப் வெங்சர்க்கார் இந்த பட்டியலில் 7ம் இடத்தில் உள்ளார்.
8. சௌரவ் கங்குலி - 113 டெஸ்ட்
சச்சின், டிராவிட், கும்ப்ளே, லக்ஷ்மண் ஆடிய டெஸ்ட் கிரிக்கெட்டின் பொன்னான காலக்கட்டத்தில் அந்த அணியை வழிநடத்திய கேப்டன் கங்குலி. 113 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள கங்குலி, இந்த பட்டியலில் 8ம் இடத்தில் உள்ளார்.
9. விராட் கோலி - 105 டெஸ்ட்
சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி 105 டெஸ்ட் போட்டிகளுடன் இந்த பட்டியலில் 9ம் இடத்தில் உள்ளார்.
10. இஷாந்த் சர்மா - 105 டெஸ்ட்
இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே ஃபாஸ்ட் பவுலர் இஷாந்த் சர்மா தான். 105 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள இஷாந்த் சர்மா, 10ம் இடத்தில் உள்ளார்.
11. ஹர்பஜன் சிங் - 103 டெஸ்ட்
இந்திய அணியின் முன்னாள் சுழல் ஜாம்பவான் ஹர்பஜன் சிங் 103 டெஸ்ட் போட்டிகளுடன் 11ம் இடத்தில் உள்ளார்.
12. வீரேந்திர சேவாக் - 103 டெஸ்ட்
இந்தியாவிற்காக சர்வதேச டெஸ்ட்டில் 2 முச்சதங்களை விளாசிய ஒரே இந்திய வீரரான சேவாக், 103 டெஸ்ட் போட்டிகளுடன் புள்ளி பட்டியலில் 12ம் இடத்தில் உள்ளார்.