2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் 5 அணிகள் கொண்ட டி20 கிரிக்கெட் போட்டிக்கு வாய்ப்பு!
வரும் 2028 ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடக்க உள்ள ஒலிம்பிக்கில் 5 அணிகள் கொண்ட டி20 போட்டிக்கு நடக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 1900 ஆம் ஆண்டுகளில் முதல் முறையாக ஒலிம்பிக்கில் கிரிக்கெட் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் ஒரே ஒரு போட்டி மட்டுமே நடத்தப்பட்டது. இந்தப் போட்டியில் இதில் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதின. எனினும், இந்தப் போட்டியை இரு நாடுகளும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.
WI vs IND: 3ஆவது ODIயிலும் இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றுவோம் – ஷாய் ஹோப்!
இந்த நிலையில் தான் கிட்டத்தட்ட 128 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதற்கான முயற்சியில் தான் தற்போது பிசிசிஐ தீவிரமாக இறங்கியுள்ளது. ஒலிம்பிக்கில் மட்டும் கிரிக்கெட் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டால் அதில் ஆண்கள் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணிகள் இடம் பெறும். மேலும், டி20 போட்டியாக நடத்தப்படும். வரும் 2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட இருக்கிறது. இதில், கிரிக்கெட் இடம் பெற சாத்தியக்கூறுகள் இருப்பதாக கூறப்படுகிறது.
WI vs IND: பாபர் அசாம் சாதனையை முறியடித்த கில்!
மேலும், ஐசிசி தரவரிசைப் பட்டியலில் முதல் 5 இடங்களைப் பிடிக்கும் அணிகள் இந்த ஒலிம்பிக் போட்டியில் இடம் பெறும். வரும் 2024 ஆம் ஆண்டு பாரிஸில் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டிக்கான ஒளிபரப்பு உரிமை மட்டும் ரூ.165 கோடி. இதுவே ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை மட்டும் சேர்த்துவிட்டால் இந்த தொகையானது வரும் 2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் ரூ.1585 கோடியாக உயர்த்தப்படும். அப்படி கிரிக்கெட்டை சேர்க்கும் பட்சத்தில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் நிதிநிலை உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.
தோனியின் மூத்த சகோதரி ஜெயந்தி குப்தா யாரை திருமணம் செய்திருக்கிறார் தெரியுமா?
ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை தொடரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா நாடுகள் இணைந்து நடத்த உள்ளன. இந்த தொடரானது வரும் ஜூன் 4ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரையில் நடக்க உள்ளது. மேலும், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் இருக்கும் உள்கட்டமைப்பு சிக்கல்கள் காரணமாக இந்த தொடரானது இங்கிலாந்திற்கு மாற்றப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது. ஆனால், அதற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் மறுப்பு தெரிவித்துள்ளன.
ஏற்கனவே ஐசிசி அதிகாரிகள் குழு அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பை தொடர் நடத்துவதற்கான மைதானங்களை தேர்வு செய்து வருவதாக தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
Asian Games 2023 QF, SF: காலிறுதி, அரையிறுதிக்கு இந்திய மகளிர் அணிக்கு கேப்டனான ஸ்மிருதி மந்தனா!