T20 WC Trophy:டி20 உலகக் கோப்பை டிராபியை கையில் ஏந்தாத மோடி – ரோகித் மற்றும் டிராவிட் கையை பற்றிய அந்த தருணம்!

டி20 உலகக் கோப்பை டிராபியோடு இந்திய அணி வீரர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க சென்ற நிலையில் மோடி டிராபியை கையில் வாங்கவில்லை.

PM Narendra Modi Holding Rahul Dravid and Rohit Sharma Hands instead of T20 World Cup 2024 Trophy during Photoshoot rsk

பெரில் சூறாவளி அச்சுறுத்தலை கடந்து 4 நாட்களுக்கு பிறகு டி20 உலகக் கோப்பை டிராபியோடு நாடு திரும்பிய இந்திய அணி வீரர்களுக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிசிசிஐ செயலாளர் பூங்கொத்து கொடுத்து ரோகித் சர்மாவை வரவேற்றார். இதையடுத்து பிசிசிஐ தலைவர் ரோஜர் பென்னி, ஜெய் ஷா மற்றும் ரோகித் சர்மா இணைந்து கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதையடுத்து அங்கிருந்து ஹோட்டலுக்கு சென்ற இந்திய அணி வீரர்களுக்கு வழிநெடுகிலும் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஹோட்டல் வந்த ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா உற்சாகமாக டான்ஸ் ஆடிய வீடியோ வைரலானது. அதன் பிறகு சாம்பியன்ஸ் ஜெர்சி அணிந்து கொண்டு பிரதமர் மோடியை சந்திப்பதற்கு அவரது இல்லத்திற்கு சென்றனர்.

 

 

கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் முதலில் டிராபியோடு அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலானது. அந்த வீடியோவில் பிரதமர் மோடி டிராபியை கையில் வாங்கவில்லை. மேலும், ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் இருவரும் டிராபியை பிடித்திருந்த நிலையில் இருவரது கையையும் பற்றியவாறு பிரதமர் மோடி போஸ் கொடுத்திருந்தார்.

இதைத் தொடர்ந்து அவர்களுடன் கலந்துரையாடினார். மிகவும் ஜாலியாக சென்ற இந்த கலந்துரையாடலில் ஒவ்வொருவரிடமும் பிரதமர் மோடி பேசியுள்ளார். அதன் பிறகு அவருடன் விருந்து அருந்திய இந்திய அணி வீரர்கள் அங்கிருந்து மும்பை விமானம் நிலையம் சென்றனர். டெல்லியிலிருந்து விமானம் மூலமாக மும்பை செல்லும் இந்திய அணி வீரர்கள் மாலை 5 மணிக்கு வெற்றி பேரணி நடத்துகின்றனர். மரைன் டிரைவ் முதல் வான்கடே ஸ்டேடியம் வரையில் திறந்தவெளி பேருந்தில் ஊர்வலமாக செல்கின்றனர். இந்திய அணி வீரர்களி ஊர்வலத்திற்கு பயன்படுத்தும் பேருந்தும் தயார் நிலையில் உள்ளது.

 

கடைசியாக இரவு 7 மணிக்கு வான்கடே மைதானத்தில் வெற்றி கொண்டாட்டமும், பரிசளிப்பு விழாவும் நடைபெற உள்ளது. இதற்காக வான்கடே மைதானத்திற்கு வருகை தரும் ரசிகர்களுக்கு இலவச அனுமதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு முதலில் வரும் ரசிகர்களுக்கு முன்னுரிமை என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios