பிக்பேஷ் லீக்கில் சிட்னி தண்டரை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. 

பிக்பேஷ் டி20 லீக் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று சிட்னி தண்டருக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி:

கேமரூன் பான்கிராஃப்ட், ஸ்டீஃபன் எஸ்கினாஸி, அஷ்டான் ஹார்டி, ஜோஷ் இங்லிஸ் (விக்கெட் கீப்பர்), அஷ்டான் டர்னர் (கேப்டன்), நிக் ஹாப்சன், அஷ்டான் அகர், மேத்யூ கெல்லி, ஆண்ட்ரூ டை, டேவிட் பெய்ன், லான்ஸ் மோரிஸ்.

தேர்வுக்குழு கவனத்தை ஈர்க்கணும்னா 60-70லாம் போதாது; பையன் பட்டைய கிளப்பிட்டான்! பிரித்விக்கு கவாஸ்கர் புகழாரம்

சிட்னி தண்டர் அணி:

டேவிட் வார்னர், மேத்யூ கில்க்ஸ் (விக்கெட் கீப்பர்), சாம் ஒயிட்மேன், ஆலிவர் டேவிஸ், அலெக்ஸ் ரோஸ், டேனியல் சாம்ஸ், பென் கட்டிங், நேதன் மெக் ஆண்ட்ரூ, கிறிஸ் க்ரீன் (கேப்டன்), பிரண்டன் டாக்கெட், உஸ்மான் காதிர்.

முதலில் பேட்டிங் ஆடிய சிட்னி தண்டர் அணியின் தொடக்க வீரர் மேத்யூ கில்க்ஸ் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டாக, சீனியர் அதிரடி தொடக்க வீரர் டேவிட் வார்னரும் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 4ம் வரிசையில் இறங்கிய ஆலிவர் டேவிஸ் மட்டும் பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்தார். 36 பந்தில் டேவிஸ் 52 ரன்கள் அடிக்க, பின்வரிசையில் மெக் ஆண்ட்ரூ 21 ரன்கள் அடித்தார். மற்ற அனைத்து வீரர்களுமே படுமோசமாக சொதப்ப, 19 ஓவரில் வெறும் 111 ரன்களுக்கு ஆல் அவுட்டானது சிட்னி தண்டர் அணி.

பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியில் அபாரமாக பந்துவீசிய ஃபாஸ்ட் பவுலர் ஆண்ட்ரூ டை 4 ஓவரில் 27 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். பெய்ன், லான்ஸ் மோரிஸ், கெல்லி ஆகிய மூவரும் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

நீ அவசரப்படாம நின்னு ஆடி சதம் அடி.. மற்றதை நான் பார்த்துக்குறேன்னு சொன்னார் தோனி..! கம்பீர் நெகிழ்ச்சி

112 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் பான்கிராஃப்ட் மற்றும் ஸ்டீஃபன் ஆகிய இருவரும் அபாரமாக ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். ஸ்டீஃபன் 40 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அரைசதம் அடித்த பான்கிராஃப்ட் 55 ரன்கள் அடித்து கடைசிவரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுத்தார். 13வது ஓவரில் இலக்கை அடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.