நீ அவசரப்படாம நின்னு ஆடி சதம் அடி.. மற்றதை நான் பார்த்துக்குறேன்னு சொன்னார் தோனி..! கம்பீர் நெகிழ்ச்சி

2011 உலக கோப்பை ஃபைனலில், கம்பீர் சதமடிக்க வேண்டும் என்று தோனி விரும்பியதாகவும், அதற்காக அவசரப்படாமல் நிதானமாக ஆடுமாறு அறிவுறுத்தியதாகவும் கம்பீரே தெரிவித்துள்ளார்.
 

gautam gambhir recalls how ms dhoni wanted to score him century and backs him for that in 2011 odi world cup final

2011 உலக கோப்பையை இந்திய அணி வென்ற தருணத்தை எந்த கிரிக்கெட் ரசிகராலும் மறந்துவிட முடியாது. 1983ல் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை வென்ற பின்னர், 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்திய அணி கோப்பையை தூக்கியது. 

மும்பை வான்கடேவில் இந்தியா  மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடந்த இறுதி போட்டியில், இந்திய அணிக்கு 275 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இலங்கை அணி. 275 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், சேவாக் ஆகிய இருவரது விக்கெட்டும் விரைவிலேயே விழுந்துவிட்டது. 

IND vs SL:குல்தீப் யாதவ், முகமது சிராஜிடம் சரணடைந்த இலங்கை! 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு எளிய இலக்கு

அதன்பின்னர் கண்டிப்பாக பெரிய பார்ட்னர்ஷிப் ஒன்றை அமைத்து, பெரிய இன்னிங்ஸ் ஆட வேண்டிய கட்டாயம் கம்பீர் மீது இருந்தது. அப்போதைய இளம் வீரரான விராட் கோலியுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை மீட்டெடுத்தார் கம்பீர். கோலி அவுட்டானதும் தோனி களத்திற்கு வந்தார். தோனியுடனும் இணைந்து அபாரமாக ஆடிய கம்பீர், 97 ரன்களை குவித்து, இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்து வெற்றியை நோக்கி வீருநடை போடவைத்தார். தோனி அதிரடியாக ஆடி வெற்றிகரமாக போட்டியை முடித்து வைத்திருந்தாலும், அதற்கு அடித்தளமிட்டு கொடுத்தவர் கம்பீர். கம்பீரின் இன்னிங்ஸ் மிக முக்கியமானது. 

ஆனால் 97 ரன்களில் கம்பீர் அவுட்டானதுதான் வருத்தமான விஷயம். நன்றாக ஆடிக்கொண்டிருந்த கம்பீர், திடீரென 97 ரன்களில் அவுட்டாகி சதத்தை தவறவிட்டு வெளியேறினார். உலக கோப்பை ஃபைனலில் சதமடிப்பது பெரிய விஷயம். ஆனால் 97 ரன்னில் ஆட்டமிழந்தார். கம்பீர் சதமடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் மட்டுமல்லாது, அவருடன் இணைந்து களத்தில் பேட்டிங் ஆடிய தோனியும் விரும்பினார். அதற்காக தோனி கம்பீரை எப்படி உற்சாகப்படுத்தியதுடன், ஆதரவும் அளித்தார் என்பதை கம்பீரே கூறியிருக்கிறார்.

ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து அதிரடியாக விலகிய ஆஸ்திரேலிய அணி..! இதுதான் காரணம்

இதுகுறித்து 12 ஆண்டுகளுக்கு பிறகு பேசிய கௌதம் கம்பீர், 2011 உலக கோப்பை ஃபைனலில் நான் சதமடிக்க வேண்டும் என்று  தோனி விரும்பினார். எனக்கு பெரும் ஆதரவாக இருந்தார். உங்களுக்கு தேவையான நேரத்தை எடுத்துக்கொண்டு சதமடியுங்கள்; அவசரப்படவேண்டாம். நான் ரிஸ்க் எடுத்து ஆடுகிறேன் என்று தோனி தன்னிடம் கூறியதாக கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios