பிக்பேஷ் லீக்கில் ஜெய் ரிச்சர்ட்ஸின் அபார பவுலிங்கால் சிட்னி சிக்ஸர்ஸை 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. 

பிக்பேஷ் டி20 லீக் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் - சிட்னி சிக்ஸர்ஸ் இடையேயான போட்டி பெர்த்தில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி;

ஃபாஃப் டுப்ளெசிஸ், ஆடம் லித், நிக் ஹாப்சன், ஜோஷ் இங்லிஷ் (விக்கெட் கீப்பர்), அஷ்டான் டர்னர் (கேப்டன்), ஆரோன் ஹார்டி, அஷ்டான் அகர், ஜெய் ரிச்சர்ட்ஸன், மேத்யூ கெல்லி, ஆண்ட்ரூ டை, ஜேசன் பெஹ்ரண்டார்ஃப்.

முதல் டெஸ்ட்டில் ஆஸி.,யிடம் மண்டியிட்டு சரணடைந்த தென்னாப்பிரிக்கா..! சதத்தை நோக்கி டிராவிஸ் ஹெட் ஆட்டம்

சிட்னி சிக்ஸர்ஸ் அணி:

ஜோஷ் ஃபிலிப் (விக்கெட் கீப்பர்), குர்டிஸ் பேட்டர்ர்சன், ஜேம்ஸ் வின்ஸ், மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ் (கேப்டன்), ஜோர்டான் சில்க், டேனியல் கிறிஸ்டியன், ஹைடன் கெர், சீன் அபாட், ஜாக்சன் பேர்ட், நவீன் உல் ஹக், இஸருல்ஹக் நவீத்.

முதலில் பேட்டிங் ஆடிய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியின் டுப்ளெசிஸ்(14), ஆடம் லித்(4), நிக் ஹாப்சன் (8), ஜோஷ் இங்லிஷ்(13), டர்னர்(2) ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, 49 ரன்களுக்கே பெர்த் அணி 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் ஆரோன் ஹார்டி அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். ஹார்டி 32 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 55 ரன்களை விளாச, பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 20 ஓவரில் 155 ரன்கள் அடித்தது. 

156 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய சிட்னி சிக்ஸர்ஸ் அணி வீரர்கள் தொடக்கம் முதலே மளமளவென விக்கெட்டுகளை இழந்தனர். ஜோர்டான் சில்க்(40) மற்றும் ஹைடன் கெர்(41) ஆகிய இருவர் மட்டுமே பொறுப்புடன் பேட்டிங் ஆடினர். மற்ற அனைவருமே ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்ததால் அந்த அணி 20 ஓவரில் 117 ரன்கள் மட்டுமே அடித்தது. 

ஜாகிர் ஹசன் சதம்; 2வது இன்னிங்ஸில் அக்ஸர் படேல் சிறப்பான பவுலிங்! முதல் டெஸ்ட்டில் வெற்றியை நெருங்கிய இந்தியா

பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி பவுலர் ஜெய் ரிச்சர்ட்ஸன் 4 ஓவர்கள் பந்துவீசி 9 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி பெர்த் அணியின் வெற்றிக்கு உதவினார். சிட்னி சிக்ஸர்ஸை 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.