ஆஷஸ் டெஸ்ட் தொடரில் அபாரமாக பந்துவீசிய கம்மின்ஸ், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு தரமான சாதனையை படைத்துள்ளார். 

ஆஷஸ் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில் 2-1 என ஆஸ்திரேலிய அணி முன்னிலை பெற்றிருந்த நிலையில், கடைசி போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடைசி போட்டியில் 399 ரன்களை ஆஸ்திரேலிய அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து அணி. அந்த இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி ஆடிவருகிறது. 

இந்த ஆஷஸ் தொடர் முழுவதுமே ஆஸ்திரேலிய அணியில் பேட்டிங்கில் ஸ்மித்தும் பவுலிங்கில் கம்மின்ஸும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த தொடரில் அதிக ரன்களை குவித்த பேட்ஸ்மேனாக ஸ்மித்தும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலராக கம்மின்ஸும் உள்ளனர். 

கடைசி போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய கம்மின்ஸ், இந்த தொடரில் மொத்தமாக 29 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 29 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், ஒரு டெஸ்ட் தொடரில், ஒரு இன்னிங்ஸில் கூட 5 விக்கெட்டுகளை வீழ்த்தாமல், ஒரு தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக ஒரு டெஸ்ட் தொடரில் ஒரு இன்னிங்ஸில் கூட 5 விக்கெட்டுகளை வீழ்த்தாமல், 28 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த ஆஸ்திரேலிய வீரர் வெய்ன் கிளார்க் தான் முதலிடத்தில் இருந்தார். தற்போது 29 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள கம்மின்ஸ் வெய்ன் கிளார்க்கின் சாதனையை முறியடித்து முதலிடத்தை பிடித்துள்ளார். இந்த ஆஷஸ் தொடரில் கம்மின்ஸின் பெஸ்ட் பவுலிங் - 32 ரன்களை கொடுத்து 4 விக்கெட் எடுத்தது தான். ஒவ்வொரு இன்னிங்ஸிலுமே சிறப்பாக பந்துவீசி சீராக விக்கெட்டுகளை வீழ்த்தியதுதான் கம்மின்ஸின் சாதனைக்கு காரணம்.