உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள இரு அணிகளாக பார்க்கப்படும் இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான போட்டியை விட ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட போட்டி இந்தியா - பாகிஸ்தான் போட்டிதான். 

முதன்முறையாக உலக கோப்பையில் இந்திய அணியை வீழ்த்தும் முனைப்பில் பாகிஸ்தான் அணியும், உலக கோப்பையில் பாகிஸ்தானிடம் தோற்றதே இல்லை என்ற ரெக்கார்டை தக்கவைக்கும் முனைப்பில் இந்திய அணியும் களம் கண்டுள்ளன. 

மான்செஸ்டாரில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் அகமது, இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். 

இந்திய அணியில் காயத்தால் தவான் ஆடாததால் ராகுல், ரோஹித்துடன் தொடக்க வீரராக களமிறங்குகிறார். அதனால் அவர் இறங்கிவந்த நான்காம் வரிசையில் விஜய் சங்கர் இறங்க உள்ளார். உலக கோப்பையில் தனது முதல் போட்டியில் களமிறங்கும் விஜய் சங்கர், முதல் போட்டியிலயே பாகிஸ்தானுக்கு எதிராக களம் காண்கிறார். வேறு எந்த மாற்றமும் இந்திய அணியில் செய்யப்படவில்லை. 

இந்திய அணி:

ரோஹித் சர்மா(துணை கேப்டன்), ராகுல், விராட் கோலி(கேப்டன்), விஜய் சங்கர், தோனி(விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், சாஹல், பும்ரா. 

பாகிஸ்தான் அணி:

ஃபகார் ஜமான், இமாம் உல் ஹக், பாபர் அசாம், முகமது ஹஃபீஸ், சர்ஃபராஸ் அகமது(கேப்டன்), ஷோயப் மாலிக், இமாத் வாசிம், ஷதாப் கான், ஹசன் அலி, முகமது அமீர், வஹாப் ரியாஸ்.