உலக கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதுகின்றன. 

பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய இரு அணிகளுமே இனிமேல் அரையிறுதிக்கு முன்னேறுவதற்கு வாய்ப்பே கிடையாது. இரு அணிகளும் தலா ஒரேயொரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளன. 

இந்த உலக கோப்பை இரு அணிகளுக்குமே படுமோசமாகவே அமைந்துள்ளது. இந்நிலையில் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

இந்த போட்டியில் இரு அணிகளுமே சீனியர் வீரரை நீக்கிவிட்டு ஆடுகிறது. தென்னாப்பிரிக்க அணியில் அனுபவ வீரர் டுமினி நீக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் அணியில், 20 ஆண்டு கால அனுபவம் கொண்ட ஷோயப் மாலிக் நீக்கப்பட்டுள்ளார். அவர் பேட்டிங், பவுலிங் என எதிலுமே பங்களிப்பு செய்யவில்லை. தொடர்ச்சியாக 2 போட்டிகளில் டக் அவுட்டானார். எனவே அவர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஹரிஸ் சொஹைல் சேர்க்கப்பட்டுள்ளார். 

பாகிஸ்தான் அணி:

ஃபகார் ஜமான், இமாம் உல் ஹக், பாபர் அசாம், முகமது ஹஃபீஸ், ஹரிஸ் சொஹைல், சர்ஃபராஸ் அகமது(கேப்டன், விக்கெட் கீப்பர்), இமாத் வாசிம், ஷதாப் கான், ரியாஸ், ஷாஹின் அஃப்ரிடி, முகமது அமீர்.

தென்னாப்பிரிக்க அணி:

டி காக்(விக்கெட் கீப்பர்), ஆம்லா, மார்க்ரம், டுப்ளெசிஸ்(கேப்டன்), வாண்டெர் டசன், டேவிட் மில்லர், ஃபெலுக்வாயோ, கிறிஸ் மோரிஸ், ரபாடா, இங்கிடி, இம்ரான் தாஹிர்.