Asianet News TamilAsianet News Tamil

Womens Asia Cup 2024: இலங்கைக்கு எதிரான 140 ரன்கள் குவித்த பாகிஸ்தான் – இறுதிப் போட்டி யாருக்கு?

இலங்கை மகளிர் அணிக்கு எதிரான மகளிர் ஆசிய கோப்பை 2024 தொடரின் 2ஆவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணியானது 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் குவித்துள்ளது.

Pakistan Women scored 140 Runs in 2nd Semi Final against Sri Lanka Women in Womens Asia Cup 2024 at Dambulla rsk
Author
First Published Jul 26, 2024, 9:14 PM IST | Last Updated Jul 26, 2024, 9:14 PM IST

மகளிர் ஆசிய கோப்பை 2024 தொடரின் 2ஆவது அரையிறுதிப் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில், பாகிஸ்தான் மகளிர் அணி மற்றும் இலங்கை மகளிர் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற, இலங்கை மகளிர் அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் குவித்தது.

ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கு முன் பிரான்ஸின் ரயில் நெட்வொர்க் மீது தாக்குதல் – ரயில் சேவை பாதிப்பு!

குல் ஃபெரோஷா மற்றும் முனீபா அலி இருவரும் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கினர். இதில், ஃபெரோஷா 25 ரன்னிலும், முனீஃபா அலி 37 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த அமீன் 10 ரன்னிலும், நிடா தர் 23 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசியாக அலியா ரியாஸ் மற்றும் ஃபாத்திமா சனா இருவரும் நிதானமாக விளையாடி ரன்கள் குவிக்க பாகிஸ்தான் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் குவித்தது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் உதேசிகா பிரபோதனி மற்றும் கவிஷா தில்ஹரி இருவரும் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

Paris Olympics 2024 – நாளை ஜூலை 27, இந்தியா விளையாடும் போட்டிகள் என்னென்ன? முதல் பதக்கம் வெல்லுமா?

பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிராக 2ஆவது அரையிறுதிப் போட்டியில் இலங்கை மகளிர் அணி வெற்றி பெற்றால் 6ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இதுவே இந்தப் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணி வெற்றி பெற்றால் 2ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios