ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கு முன் பிரான்ஸின் ரயில் நெட்வொர்க் மீது தாக்குதல் – ரயில் சேவை பாதிப்பு!

ஒலிம்பிக் 2024 தொடக்க விழா இன்று இரவு 11 மணிக்கு நடைபெற உள்ள நிலையில் பாரிஸில் ரயில் பாதை மற்றும் நெட்வொர்க் மீதான தாக்குதல் சம்பவத்தால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

France Train Line network Attack ahead of Paris 2024 Olympics Opening Ceremony rsk

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 33ஆவது ஒலிம்பிக் தொடர் ஜூலை 26ஆம் தேதி இன்று முதல் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்தியா சார்பில் 117 விளையாட்டு வீர்ரகள் உள்பட மொத்தமாக 10,714 விளையாட்டு வீரர்கள் இந்த தொடரில் இடம் பெற்று விளையாடுகின்றன. செய்ன் நதியில் நடைபெறும் தொடக்க விழாவில் இந்த தொடரில் இடம் பெற்ற விளையாட்டு வீரர்கள் 600 படகுகளில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட இருக்கின்றனர்.

வங்கதேசத்திற்கு ஆப்பு வச்சு 9ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு சென்ற இந்திய மகளிர் அணி!

இதில் அந்தந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் அவர்களது நாட்டிற்காக கொடியை ஏந்திச் சென்று அணிவகுப்பு நடத்துவார்கள். இந்தியா சார்பில் சரத் கமல் மற்றும் பிவி சிந்து இருவரும் தேசிய கொடியை ஏந்திச் செல்கின்றனர். வரலாற்றில் முதல் முறையாக தொடக்க விழா ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் நடைபெறாமல் ஸ்டேடியத்திற்கு வெளியில் செய்ன் நதியில் நடைபெறுகிறது.

கிட்டத்தட்ட 6 கிமீ தூரம் வரையில் ஊர்வலமாக செல்லும் இந்த அணி வகுப்பு நிகழ்ச்சி கடைசியாக டிரோகாடெரோவில் முடிவடைகிறது. ஈபிள் டவருக்கு எதிரில் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த தொடக்க விழாவை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தொடங்கி வைக்க இருக்கிறார்.

Paris Olympics 2024 – நாளை ஜூலை 27, இந்தியா விளையாடும் போட்டிகள் என்னென்ன? முதல் பதக்கம் வெல்லுமா?

இந்த நிலையில் தான் பாரிஸில் ரயில் நெட்வொர்க்கில் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. தீ வைப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. வரும் 29ஆம் தேதிக்கு பிறகு தான் மீண்டும் ரயில் சேவை இயக்கப்படும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. பிரான்ஸ் அதிகாரிகள் இது குற்றச் செயல்கள் என்று கருதிய நிலையில் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இங்கிலாந்து, பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து, ஜெர்மனி மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் அதிகவேக ரயில் சேவை நிறுவனமான யூரோஸ்டாரும் பாரிஸ் மற்றும் லில்லி இடையிலான அதிவேக ரயில் பாதையில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. பாரிஸை மேற்கு, வடக்கு மற்றும் கிழக்குடன் இணைக்கும் பாதைகளில் தீ வைத்து, பிரான்ஸ் ரயில் நெட்வொர்க் சேவையானது பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. இந்த தாக்குதல் காரணமாக லண்டனில் இருந்து பிரான்ஸ் தலைநகருக்கு செல்லும் ரயில்கள் உட்பட யூரோஸ்டார் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

Sharath Kamal: ஒலிம்பிக்கில் சிந்துவுடன் தேசிய கொடியை ஏந்தி செல்லும் தமிழன்; யார் இந்த சரத் கமல்?

இது குறித்து பிரான்ஸ் பிரதமர் கேப்ரியல் அட்டல் கூறியிருப்பதாவது: ரயில் நெட்வொர்க் முற்றிலும் நாசவேலை செயல்களால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டுபிடித்து தண்டிப்பதற்கு சிறப்பு புலனாய்வு சேவைகளும், சட்ட அமலாக்கத்துறையும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது என்று கூறியுள்ளார். இதே போன்று பிரான்ஸ் போக்குவரத்து துறை அமைச்சர் பேட்ரிஸ் வெர்கிரிட் கூறியிருப்பதாவது: அதிகாலையில் மூன்று தளங்கள் மீதான தாக்குதல்கள் இரயில்வேயுடன் இணைக்கப்பட்ட கேபிள் கிளஸ்டர்களில் எரிபொருளை ஊற்றி தீ வைக்கப்பட்டது என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios