அண்டர் 19 உலக கோப்பை தொடர் தென்னாப்பிரிக்காவில் நடந்துவருகிறது. இந்த உலக கோப்பையில் லீக் தொடரில், இலங்கை, ஜப்பான், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளை வீழ்த்தி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. 

இந்திய அணியை தவிர பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து ஆகிய அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின. முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளும், இரண்டாவது அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகளும் மோதுகின்றன. 

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான முதல் அரையிறுதி போட்டி இன்று நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. 

அண்டர் 19 இந்திய அணி:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், திவ்யன்ஷ் சக்ஸேனா, திலக் வர்மா, ப்ரியம் கர்க்(கேப்டன்), த்ருவ் ஜுரேல்(விக்கெட் கீப்பர்), சித்தேஷ் வீர், அதர்வா அன்கோல்கர், ரவி பிஷ்னோய், சுஷந்த் மிஷ்ரா, கார்த்திக் தியாகி, ஆகாஷ் சிங்.