Jasprit Bumrah: தந்தையான பும்ராவை பாராட்டி பரிசு பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அஃப்ரிடி; வைரலாகும் வீடியோ!
தந்தையான ஜஸ்ப்ரித் பும்ராவை பாராட்டி பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி பரிசு ஒன்றை கொடுத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ராவிற்கும், டெலிவிஷன் பிரபலமான சஞ்சனா கணேஷிற்கும் கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் தேதி திருமணம் நடந்தது. இதையடுத்து தற்போது 2 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 4ஆம் தேதி ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் சஞ்சனா கணேஷ் தம்பதியினருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
India vs Pak: ரிசர்வ் டே – நாளைக்கு தள்ளி வைக்கப்பட்ட இந்தியா – பாகிஸ்தான் போட்டி!
இது குறித்து ஜஸ்ப்ரித் பும்ரா தனது டுவிட்டர் பக்கத்தில், எங்கள் சிறிய குடும்பம் வளர்ந்துள்ளது. எங்கள் இதயங்கள் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு நிரம்பியுள்ளன! இன்று காலை நாங்கள் எங்கள் சிறுவன் அங்கத் ஜஸ்பிரித் பும்ராவை உலகிற்கு வரவேற்றோம். நாங்கள் நிலவுக்கு மேல் இருக்கிறோம், எங்கள் வாழ்க்கையின் இந்த புதிய அத்தியாயம் அனைத்திற்கும் காத்திருக்க முடியாது- ஜஸ்பிரித் மற்றும் சஞ்சனா என்று குறிப்பிட்டிருந்தார்.
பும்ரா தனது குழந்தைக்கு அங்கத் என்று பெயரிட்டுள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டியைத் தொடர்ந்து நேபாள் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் பும்ரா இடம் பெறவில்லை. இதையடுத்து சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக இலங்கை சென்று அங்கு பயிற்சி மேற்கொண்டார்.
இன்று நடந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பும்ரா இடம் பெற்றிருந்தார். இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி முதலில் இந்திய அணி பேட்டிங் ஆடியது. இதையடுத்து ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர். இதில், ரோகித் சர்மா 56 ரன்னிலும், சுப்மன் கில் 58 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடியானது 121 ரன்கள் குவித்தது.
KL Rahul: கேஎல் ராகுல் வருகை, வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட சஞ்சு சாம்சன்!
பின்னர் வந்த கேஎல் ராகுல் 17 ரன்னுடனும், விராட் கோலி 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். அப்போது மழை குறுக்கிடவே போட்டியானது ரிசர்வ் டே என்று சொல்லப்படும் அடுத்த நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், தான், பும்ரா தந்தையானதை பாராட்டிய பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி அவருக்கு பரிசு ஒன்றையும் கொடுத்துள்ளார். இது பும்ரா அணிவதற்காக ஷாஹீன் அஃப்ர்டி வாங்கி கொடுத்துள்ள ஷூவாக கூட இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், அது என்ன பரிசு என்று பும்ரா தெரிவித்தால் தான் உண்டு.