Asianet News TamilAsianet News Tamil

AFG vs PAK:பேட்டிங், பவுலிங் இரண்டிலும் அசத்திய ஷதாப் கான்!கடைசி டி20யில் ஜெயித்து ஒயிட்வாஷை தவிர்த்தது பாக்.,

ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று ஒயிட்வாஷை தவிர்த்தது பாகிஸ்தான் அணி.
 

pakistan beat afghanistan by 66 runs in last t20 and avoid whitewash
Author
First Published Mar 28, 2023, 2:32 PM IST

ஆஃப்கானிஸ்தான் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் ஷார்ஜாவில் நடந்தது. 3 போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் ஜெயித்து 2-0 என ஆஃப்கானிஸ்தான் அணி டி20 தொடரை வென்றது. பாகிஸ்தானுக்கு எதிராக முதல் முறையாக டி20 தொடரை வென்று சாதனை படைத்தது ஆஃப்கானிஸ்தான் அணி.

ஷார்ஜாவில் நடந்த 3வது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. 

ஆஃப்கானிஸ்தான் அணி: 

ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), உஸ்மான் கனி, இப்ராஹிம் ஜட்ரான், நஜிபுல்லா ஜட்ரான், முகமது நபி, கரிம் ஜனத், செடிகுவெல்லா அடல், ரஷீத் கான் (கேப்டன்), முஜீபுர் ரஹ்மான், ஃபஸல்ஹக் ஃபரூக்கி, ஃபரீத் அகமது மாலிக், அஸ்மதுல்லா ஓமர்ஸாய். 

IPL 2023: புதிய கேப்டனின் கீழ் களமிறங்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வலுவான ஆடும் லெவன்

பாகிஸ்தான் அணி: 

சயிம் அயுப், முகமது ஹாரிஸ் (விக்கெட் கீப்பர்), அப்துல்லா ஷாஃபிக், டயாப் தாஹிர், இஃப்டிகார் அகமது, ஷதாப் கான் (கேப்டன்), இமாத் வாசிம், முகமது நவாஸ், முகமது வாசிம், ஜமான் கான், ஈசானுல்லா.

முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் சயிம் அயுப் அதிரடியாக ஆடி 40 பந்தில் 49 ரன்கள் அடித்து அரைசதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். அப்துல்லா ஷாஃபிக் 13 பந்தில் 23 ரன்கள் அடித்தார். இஃப்டிகார் அகமது 31 ரன்கள் அடிக்க, கேப்டன் ஷதாப் கான் 17 பந்தில் 28 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் பாகிஸ்தான் அணி 182 ரன்களை குவித்தது.

IPL 2023: விதி வலியது.. எல்லா அணிகளும் புறக்கணித்த சந்தீப் ஷர்மாவை ஒப்பந்தம் செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ்

183 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய ஆஃப்கானிஸ்தான் அணி வீரர்கள் தொடக்கம் முதலே சொற்ப ரன்களுக்கு சீரான இடைவெளியில் மளமளவென ஆட்டமிழக்க, அந்த அணி 18.4 ஓவரில் 116 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய கேப்டன் ஷதாப் கான் மற்றும் ஈசானுல்லா ஆகிய இருவரும் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக ஒயிட்வாஷை தவிர்த்தது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios