Asianet News TamilAsianet News Tamil

ஆசிய கோப்பை: இந்தியாவிற்கு எதிராக அறிமுகமாகும் 19 வயது இளம் பாக்., ஃபாஸ்ட் பவுலர்

ஆசிய கோப்பையில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகிறார் பாகிஸ்தானின் 19 வயது இளம் ஃபாஸ்ட் பவுலர்.
 

pakistan 19 year old young fast bowler naseem shah set to debut t20i against india in asia cup 2022
Author
First Published Aug 28, 2022, 6:56 PM IST

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் இலங்கையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஃப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி இன்று துபாயில் நடக்கிறது. இரு அணிகளுமே வெற்றிவேட்கையுடன் களமிறங்குகின்றன.

இந்திய அணியின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலரான பும்ரா மற்றும் பாகிஸ்தான் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர் ஷாஹீன் அஃப்ரிடி ஆகிய இருவரும் காயத்தால் ஆசிய கோப்பையில் ஆடவில்லை.

ஷாஹீன் அஃப்ரிடிக்கு மாற்று வீரராக முகமது ஹஸ்னைன் மற்றும் முகமது வாசிமுக்கு மாற்று வீரராக ஹசன் அலி ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டனர். இவர்கள் தவிர ஹாரிஸ் ராஃப், நசீம் ஷா ஆகிய ஃபாஸ்ட்பவுலர்களும் உள்ளனர்.

அண்மையில் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான 19 வயதான இளம் ஃபாஸ்ட் பவுலரான நசீம் ஷா, இன்றைய இந்தியாவிற்கு எதிரான போட்டியில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகிறார்.
 
நசீம் ஷா டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாவதை அவரே உறுதி செய்துள்ளார் .இந்தியாவிற்கு எதிரான போட்டியை மற்ற எதிரணிகளுக்கு எதிரான இன்னொரு போட்டியை போன்றே பார்ப்பதாக நசீம் ஷா தெரிவித்துள்ளார். 

ஆசிய கோப்பைக்கான பாகிஸ்தான் அணி:

பாபர் அசாம் (கேப்டன்), ஷதாப் கான் (துணை கேப்டன்), ஆசிஃப் அலி, ஃபகர் ஜமான், ஹைதர் அலி, ஹாரிஸ் ராஃப், இஃப்டிகார் அகமது, குஷ்தில் ஷா, முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், ஹசன் அலி, நசீம் ஷா, முகமது ஹஸ்னைன், ஷாநவாஸ் தஹானி, உஸ்மான் காதிர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios