உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று 2 போட்டிகள் நடக்கின்றன. இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு தொடங்கிய போட்டியில் நியூசிலாந்து அணியும் இலங்கை அணியும் ஆடிவருகின்றன. மாலை 6 மணிக்கு நடக்கும் போட்டியில் ஆஸ்திரேலியாவும் ஆஃப்கானிஸ்தானும் மோதுகின்றன. 

கார்டிஃபில் நடக்கும் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பவுலிங் தேர்வு செய்தார். இலங்கை அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். உலக கோப்பையில் ஓரளவிற்கு வெற்றிகரமான அணியான இலங்கை அணி தற்போது ஃபார்மில் இல்லை. தொடர் தோல்விகளால் துவண்டு போயுள்ளது. 

அதேநேரத்தில் நியூசிலாந்து அணி நல்ல பேலன்ஸான மற்றும் வலுவான அணியாக திகழ்கிறது. பயிற்சி போட்டியில் இந்திய அணியை வீழ்த்தியது நியூசிலாந்து. ஆனால் வெஸ்ட் இண்டீஸிடம் தோற்றது. ஆனாலும் அதிரடி பேட்ஸ்மேன்கள், நல்ல ஆல்ரவுண்டர்கள், மிரட்டலான ஃபாஸ்ட் பவுலர்கள் என நல்ல பலமான அணியாக நியூசிலாந்து உள்ளது. 

நியூசிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் டாம் லதாம் காயமடைந்திருந்ததால் பயிற்சி போட்டிகளில் அவர் ஆடவில்லை. அவருக்கு பதிலாக பிளெண்டல் ஆடினார். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட ப்ளெண்டல், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக அபார சதமடித்தார். டாம் லதாம் உடற்தகுதி பெற்றுவிட்டதால், ப்ளெண்டலுக்கு அணியில் இடம் அளிக்கப்படவில்லை. லதாமே இந்த போட்டியில் ஆடுகிறார். இஷ் சோதி, டிம் சௌதி, ப்ளெண்டல், நிகோல்ஸ் ஆகிய நால்வரும் ஆடும் லெவனில் இல்லை.

நியூசிலாந்து அணி:

மார்டின் கப்டில், முன்ரோ, கேன் வில்லியம்சன்(கேப்டன்), ரோஸ் டெய்லர், டாம் லதாம்(விக்கெட் கீப்பர்), ஜேம்ஸ் நீஷம், கோலின் டி கிராண்ட்ஹோம், மிட்செல் சாண்ட்னெர், ஹென்ரி, ஃபெர்குசன், ட்ரெண்ட் போல்ட்.

இலங்கை அணி:

கருணரத்னே(கேப்டன்), திரிமன்னே, குசால் பெரேரா(விக்கெட் கீப்பர்), குசால் மெண்டிஸ், மேத்யூஸ், தனஞ்செயா டி சில்வா, திசாரா பெரேரா, உடானா, ஜீவன் மெண்டிஸ், சுரங்கா லக்மல், லசித் மலிங்கா.