Asianet News TamilAsianet News Tamil

ஐசிசி தரவரிசை ரேங்கிங்கில் நம்பர் 1 இடம் பெறுமா? ஷமி, சிராஜ் அவுட்; மாலிக், சகால் இன்; இந்தியா பேட்டிங்!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற அணி நியூசிலாந்து அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.
 

New Zealand Won the Toss and Choose to Bowl First Against India in 3rd ODI in Holkar Cricket Stadium Indore
Author
First Published Jan 24, 2023, 1:21 PM IST

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி முதலில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்று கைப்பற்றியுள்ளது. இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இன்று இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது.

5 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் 50 ஓவர் போட்டி: நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்யுமா இந்தியா?

தொடரை கைப்பற்றிய நிலையில், இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரையில் இந்தியாவில் நடந்த 38 ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணி 28 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்து அணி 8 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இது ஒருபுறம் இருக்க இந்தூர் ஹோல்கர் மைதானத்தில் இந்தியா இதுவரையில் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளிலும் வெற்றி வாகை சூடியுள்ளது. அதிலேயும், முதலில் பேட்டிங் செய்யும் அணி 3 போட்டியில் வெற்றியும், இரண்டாவது பேட்டிங் செய்யும் அணி 2 போட்டியில் வெற்றியும் வெற்றி பெற்றுள்ளன.

ஸ்மிருதி மந்தனா அதிரடி: வெஸ்ட் இண்டீஸை காலி செய்து புள்ளிப் பட்டியலில் இந்தியா நம்பர் 1 இடம்!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் 115 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியதில் இந்தியா 57 ஒரு நாள் போட்டிகளில் வெற்றி வாகை சூடியுள்ளது. நியூசிலாந்து 50 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி டையில் முடிந்துள்ள நிலையில், 7 போட்டிகளுக்கு முடிவு இல்லை. இந்தூரில் இந்தியா அடித்த 418 ரன்களே அதிகபட்ச ரன்னாக இருந்துள்ளது. இந்த நிலையில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இன்று இந்தூரில் நடக்கிறது. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் பௌலிங் தேர்வு செய்துள்ளார். 

மாமனார் பொறுப்பை விட அப்பா பொறுப்பை நான் நன்றாகவே நிறைவேற்றுகிறேன்: சுனில் ஷெட்டி!

நியூசிலாந்து அணியில் ஹென்றி சிப்லேவிற்குப் பதிலாக ஜாக்கோப் டுப்பி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதே போன்று இந்திய அணியிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோருக்குப் பதிலாக யுஸ்வேந்திர சகால் மற்றும் உம்ரான் மாலிக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தூர் ரெக்கார்டு சொல்லும் புதிய ஸ்டேட்டிஸ்டிக்ஸ்: சேவாக் 219 அடிச்சது இங்க தான்; நியூ.,க்கு ஆப்பு ரெடி!

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர், யுஸ்வேந்திர சகால் மற்றும் உம்ரான் மாலிக்

நியூசிலாந்து: பின் ஆலென், டெவோன் கான்வே, ஹென்றி நிக்கோலஸ், டேரில் மிட்செல், டாம் லாதம் (கேப்டன்), கிளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர், லக்கி பெர்குசன், ஜாக்கோப் டுப்பி, பிளேர் டிகனர்

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios