NZ vs AUS 1st T20I: வானவேடிக்கை காட்டிய ரச்சின் ரவீந்திரா, டெவோன் கான்வே – நியூசிலாந்து 215 ரன்கள் குவிப்பு!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் குவித்துள்ளது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் கட்டமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடக்கிறது. இதில், இன்று நடக்கும் முதல் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி பின் ஆலன் மற்றும் டெவோன் கான்வே இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர்.
பின் ஆலன் 32 ரன்களில் ஆட்டமிழக்க, ரச்சின் ரவீந்திரா களமிறங்கினார். கான்வே மற்றும் ரவீந்திரா ஜோடி சேர்ந்து ஆஸ்திரேலியா பவுலர்களை சரமாரியாக வெளுத்து வாங்கினர். ரச்சின் ரவீந்திரா 35 பந்துகளில் 2 பவுண்டரி, 6 சிக்ஸர் உள்பட 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதே போன்று கான்வே 46 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 63 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
கடைசியாக வந்த கிளென் பிலிப்ஸ் 19 ரன்களும், மார்க் சாப்மேன் 18 ரன்கள் எடுக்க நியூசிலாந்து 3 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியாவைப் பொறுத்த வரையில் பவுலிங்கில் மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். இதையடுத்து 216 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ஆஸ்திரேலியா பேட்டிங் செய்து வருகிறது.