வெற்றியை நோக்கி வங்கதேசம் – 4 கைப்பற்றிய தைஜூல் இஸ்லாம்; நியூசிலாந்து 7 விக்கெட் இழந்து தடுமாற்றம்!

வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து 4ஆம் நாள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 117 ரன்கள் மட்டுமே எடுத்து விளையாடி வருகிறது.

New Zealand Scored 117 Runs for 7 Wickets against Bangladesh in 1st Test Match Sylhet

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணியானது முதலில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில், நியூசிலாந்து 2-0 என்று ஒருநாள் தொடரை கைப்பற்றியது. இதையடுத்து, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தற்போது நடந்து வருகிறது.

டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா இருப்பார் – ஆகாஷ் சோப்ரா!

இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணியானது முதல் இன்னிங்ஸில் 310 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து 317 ரன்கள் எடுத்தது. இதில், கேன் வில்லியம்சன் 104 ரன்கள் எடுத்தார். பின்னர், 7 ரன்கள் பின் தங்கிய நிலையில், வங்கதேச அணி 2ஆவது இன்னிங்ஸை ஆடியது. இதில் கேப்டன் நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ நிதானமாக விளையாடி சதம் அடித்தாவர். அவர் 198 பந்துகளில் 10 பவுண்டரி உள்பட 105 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

முஷ்பிகுர் ரஹீம் பொறுமையாக விளையாடி 67 ரன்கள் சேர்த்தார். மெஹிடி ஹசன் மிராஸ் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக, வங்கதேச அணியானது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 338 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலமாக நியூசிலாந்து அணிக்கு 332 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

IPL Auction 2024: மினி ஏலத்தில் டார்கெட் செய்யப்பட்ட வீரர்கள் யார் யார்? புட்டு புட்டு வைத்த சிஎஸ்கே நிர்வாகி!

இதையடுத்து, 332 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட நியூசிலாந்து அணி 2ஆவது இன்னிங்ஸ் விளையாடி வருகிறது. 4ஆம் நாள் முடிவில் நியூசிலாந்து அணியானது 7 விக்கெட்டுகளை இழந்து 117 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இதில், டாம் லாதம் 0, டெவான் கான்வே 22, கேன் வில்லியம்சன் 11, ஹென்ரி நிக்கோலஸ் 4, டாம் பிளண்டல் 6, கிளென் பிலிப்ஸ் 12, கைல் ஜேமிசன் 9 என்று சீனியர் வீரர்கள் ஒவ்வொருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ சதம்; நியூசிலாந்திற்கு 332 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த வங்கதேசம்!

டேரில் மிட்செல் மற்றும் இஷ் ஜோதி இருவரும் இணைந்து நிதானமாக விளையாடி வருகின்றனர். மிட்செல் 44 ரன்களுடனும், ஜோதி 7 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். பந்து வீச்சைப் பொறுத்த வரையில் வங்கதேச அணியில் தைஜூல் இஸ்லாம் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஷோரிஃபுல் இஸ்லாம், மெஹிடி ஹசன் மிராஸ், நயீன் ஹசன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

நான்காம் நாள் முடிவில் நியூசிலாந்து 7 விக்கெட்டுகளை இழந்து 117 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இன்னும் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினால் வங்கதேச அணி வெற்றி பெறும். நியூசிலாந்து வெற்றி பெற 219 ரன்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

5 ஆண்டுகளாக கரண்ட் பில் நோ நோ,ரூ.3.16 கோடி நாமம் போட்ட ராய்பூர் ஸ்டேடியம் - IND vs AUS 4th T20 நடக்குமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios