Australia vs New Zealand: காயத்திலிருந்து மீண்டு வந்த டிராவிஸ் ஹெட் – டாஸ் வென்ற நியூசிலாந்து பீல்டிங் தேர்வு!
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக தரம்சாலாவில் நடக்கும் 27ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்துள்ளார்.
தரம்சாலாவில் தற்போது உலகக் கோப்பையின் 27ஆவது லீக் போட்டி நடக்கிறது. இதில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் பவுலிங் செய்வதாக அறிவித்துள்ளார். நியூசிலாந்து அணியைப் பொறுத்த வரையில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மார்க் சேப்மேனுக்குப் பதிலாக ஜிம்மி நீசம் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சான்ட்னர் இன்று தனது 100ஆவது ஒரு நாள் போட்டியில் விளையாடுகிறார்.
இதே போன்று ஆஸ்திரேலியா அணியிலும் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கேமரூன் க்ரீனுக்குப் பதிலாக டிவிராஸ் ஹெட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், இன்றைய போட்டியில் விளையாடுவதன் மூலமாக உலகக் கோப்பை வரலாற்றில் 100 போட்டிகளில் விளையாடிய முதல் அணி என்ற பெருமையை ஆஸ்திரேலியா பெற்றுள்ளது. இதில், 72 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. 25 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.
Pakistan vs South Africa: முதல் முறையாக உலகக் கோப்பையில் பாகிஸ்தான் தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வி!
ஆஸ்திரேலியா:
டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், மார்னஷ் லபுஷேன், ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), கிளென் மேக்ஸ்வெல், பேட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹசல்வுட்
நியூசிலாந்து:
டெவான் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் லாதம் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), கிளென் பிலிப்ஸ், ஜேம்ஸ் நீசம், மிட்செல் சான்ட்னர், மேட் ஹென்ரி, லாக்கி ஃபெர்குசன், டிரெண்ட் போல்ட்
PAK vs SA: 24 ஆண்டுகளில் முதல் முறையாக ஐசிசி போட்டிகளில் பாகிஸ்தானை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா சாதனை!
மேலும், 1987, 1999, 2003, 2007, 2015 ஆகிய ஆண்டுகளில் ஆஸ்திரேலியா உலகக் கோப்பை டிராபியை கைப்பற்றியுள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் உலகக் கோப்பையில் 11 முறை மோதியுள்ளன. இதில், 8 போட்டிகளில் ஆஸ்திரேலியாவும், 3 போட்டிகளில் நியூசிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதே போன்று இரு அணிகளும் 141 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில், 95 போட்டிகளில் ஆஸ்திரேலியாவும், 34 போட்டிகளில் நியூசிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. 7 போட்டிகளுக்கு முடிவு எட்டப்படவில்லை. கடைசியாக இரு அணிகளும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மோதியுள்ளன. இதில், ஆஸ்திரேலியா 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. தற்போது முதல் முறையாக தரம்சாலா மைதானத்தில் இரு அணிகளும் மோதுகின்றன. உலகக் கோப்பை புள்ளிப்பட்டியலில் நியூசிலாந்து 3 ஆவது இடத்திலும், ஆஸ்திரேலியா 4ஆவது இடத்திலும் உள்ளன.
- AUS vs NZ World Cup Cricket
- Australia
- Australia 100th World Cup Match
- Australia vs New Zealand
- Australia vs New Zealand 27th Match
- Australia vs New Zealand Live Score
- Australia vs New Zealand Watch Live Streaming
- Australia vs New Zealand World Cup
- CWC 2023
- Cricket World Cup 2023
- Dharamsala
- ICC Cricket World Cup 2023
- Mitchell Santner
- New Zealand
- Pat Cummins
- Points Table
- Tom Latham
- Travis Head
- Watch AUS vs NZ Live
- World Cup 2023
- World Cup AUS vs NZ Venue
- World Cup Cricket Live Scores