சீனாவின் ஹாங்சோவில் நடந்த ஆண்களுக்கான 400 மீ T47 பிரிவில் இந்தியாவின் திலீப் மஹது காவிட் இந்தியாவிற்கு 100ஆவது பதக்கத்தை பெற்றுக் கொடுத்துள்ளார்.
சீனாவின் ஹாங்சோவில் 4ஆவது பாரா ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. கடந்த 22ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் நாளை 28ஆம் தேதி வரையில் நடக்கிறது. இதில், இந்தியா சார்பில் 191 வீரர்கள் மற்றும் 112 வீராங்கனைகள் என்று மொத்தமாக 303 பேர் கலந்து கொண்டுள்ளனர். தற்போது நடந்து வரும் போட்டிகளில் கேனோ, பிளைண்ட் ஃபுட்பால், லான் பவுல்ஸ், ரோயிங் மற்றும் டேக்வாண்டோ ஆகிய ஐந்து விளையாட்டுகள் உட்பட 17 பிரிவுகளில் இந்தியா முதல் முறையாக பங்கேற்கிறது.
Pakistan vs South Africa: முதல் முறையாக உலகக் கோப்பையில் பாகிஸ்தான் தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வி!
இந்த நிலையில் தான் இன்று நடந்த ஆண்களுக்கான 400 மீ தடகளப் போட்டி T47 பிரிவில் இந்தியாவின் திலீப் மஹது காவிட் போட்டி தூரத்தை 49.48 வினாடிகளில் கடந்து தங்கம் வென்றுள்ளார். இதன் மூலமாக இந்தியாவிற்கு 100ஆவது பதக்கத்தை பெற்றுக் கொடுத்துள்ளார். ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டி F55 பிரிவில் இந்தியாவின் நீரஜ் யாதவ் தங்கம் வென்றுள்ளார். மேலும், தேக் சந்த் மஹ்லவத் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினர். தர்பன் இரானி தனது அசைக்க முடியாத விளையாட்டு உற்சாகம் மற்றும் அற்புதமான திறமை மூலம் ஆண்களுக்கான B1 பிரிவில் பாரா செஸ்ஸில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
PAK vs SA: 24 ஆண்டுகளில் முதல் முறையாக ஐசிசி போட்டிகளில் பாகிஸ்தானை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா சாதனை!
நேற்று வரையில் இந்தியா 25 தங்கம், 29 வெள்ளி மற்றும் 49 வெண்கலம் என்று மொத்தமாக 99 பதக்கங்களை வென்று இருந்தது. இந்த நிலையில், இன்றைய முதல் போட்டியில் திலீப் மஹது காவிட் ஒரு தங்கம் வென்றதன் மூலமாக இந்தியா 100ஆவது பதக்கத்தை வென்றது. தற்போது வரையில் இந்தியா 28 தங்கம் 31 வெள்ளி மற்றும் 49 வெண்கலம் என்று மொத்தமாக 108 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது.
