Asianet News TamilAsianet News Tamil

Pakistan vs South Africa: ஒரு விக்கெட்டில் த்ரில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா – பாகிஸ்தான் ஹாட்ரிக் தோல்வி!

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்கா ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது.

South Africa beat Pakistan by 1 wicket difference in 26th Match of Cricket World Cup at MA Chidambaram Stadium, Chennai
Author
First Published Oct 27, 2023, 10:43 PM IST | Last Updated Oct 27, 2023, 10:53 PM IST

சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 26ஆவது லீக் போட்டி நடந்தது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 270 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக சவுத் சகீல் 62 ரன்களும், பாபர் அசாம் 50 ரன்களும், ஷதாப் கான் 43 ரன்களும் எடுத்தனர்.

ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவு: இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் யார்?

பின்னர் 271 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணியில் தொடக்க வீரர் குயீண்டன் டி காக் 24 ரன்னிலும், கேப்டன் டெம்பா பவுமா 28 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த ரஸ்ஸி வான் டெர் டுசென் 21 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த ஹென்ரிச் கிளாசென் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு தான் ஐடன் மார்க்ரம் களமிறங்கினார்.

Pakistan vs South Africa: தலை, தோள்பட்டையில் ஷதாப் கான் காயம் – மைதானத்திற்கு கொண்டு வரப்பட்ட ஸ்ட்ரெட்சர்!

கடைசி வரை நிதானமாக விளையாடிய மார்க்ரம் பவுண்டரி அடிக்க முயற்சித்து கடைசியில் தூக்கி அடிக்க கேட்ச் ஆகி வெளியேறினார். அப்போது அவர் 91 ரன்கள் எடுத்திருந்தார். கடைசி வரை சிங்கிளாக எடுத்திருந்தால் கூட சதமும் அடித்திருப்பார். அணியும் வெற்றி பெற்றிருக்கும்.

டேவிட் மில்லர் 29 ரன்னிலும், மார்கோ ஜான்சென் 20 ரன்னிலும், கெரால்டு கோட்ஸி 10 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசி நேரத்தில் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் அஃப்ரிடி திருப்பு முனையை ஏற்படுத்தினார். அடுத்து வந்த லுங்கி நிகிடி 4 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசியாக கேசவ் மகாராஜ் மற்றும் தப்ரைஸ் ஷம்சி இருவரும் இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

Pakistan vs South Africa: தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டில் சிக்ஸர் அடித்த பாகிஸ்தான் வீரர் – வைரலாகும் வீடியோ!

இதில், தென் ஆப்பிரிக்கா 47.2 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 271 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகள் மற்றும் நெட் ரட் ரேட் அடிப்படையில் தென் ஆப்பிரிக்கா நம்பர் ஒன் இடம் பிடித்துள்ளது. பாகிஸ்தான் 4 போட்டிகளில் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடத்திற்கு சரிந்துள்ளது. மேலும், கடைசி 3 போட்டிகளில் ஹாட்ரிக் தோல்வி அடைந்துள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios