பழிக்கு பழி வாங்கி WCன் முதல் போட்டியில் சாதனை படைத்த நியூசிலாந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

இங்கிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பையின் முதல் லீக் போட்டியில் நியூசிலாந்து 9 விக்கெட் வித்தியாத்தில் வெற்றி பெற்றுள்ளது.

New Zealand Create History after Beating England by 9 Wickets difference in 1st Match of Cricket World Cup 2023 at Narendra Modi Stadium, ahmedabad rsk

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை தொடரின் முதல் லீக் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசியது. அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து 50 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 282 ரன்கள் குவித்தது. இதன் மூலமாக உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு அணியில் இடம் பெற்ற 11 வீரர்களும் இரட்டை இலக்க ரன்கள் குவித்துள்ளனர். அதோடு, 4658 ஒரு நாள் போட்டிகள் வரலாற்றில் முதல் முறையாக ஒரு அணியில் இடம் பெற்ற 11 வீரர்களும் இரட்டை இலக்க ரன்கள் எடுத்துள்ளனர்.

England vs New Zealand: உலகக் கோப்பையில் ரசிகர்களுக்கு இலவச குடிநீர் வழங்கப்படும் – ஜெய் ஷா அறிவிப்பு!

பின்னர் கடின இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு டேவிட் மலான் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். இதையடுத்து டெவான் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா இருவரும் ஜோடி சேர்ந்து ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினர். இருவரும் பவுண்டரியும், சிக்ஸருமாக விளாசினர். ஒரு கட்டத்தில் ரச்சின் ரவீந்திரா 47 ரன்கள் இருந்த போது சிக்ஸர் அடித்து தனது முதல் உலகக் கோப்பையில் அரைசதம் அடித்தார்.

Asian Games 2023: ஆப்பிரிக்க வம்சாவளி தடகள வீரர்களால் இந்தியாவின் பதக்கம் குறைந்ததா?

அதன் பிறகு டெவான் கான்வேயும் தன் பங்கிற்கு அரைசதம் அடித்தார். தொடர்ந்து இருவரும் அதிரடி காட்டினார். கான்வே மற்றும் ரவீந்திரா ஜோடி முதலில் 150 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொடுத்தது. அதன் பிறகு 200, 250 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொடுத்தது. முதலில் கான்வே சதம் அடித்து, இந்த ஆண்டுக்கான உலகக் கோப்பையின் முதல் போட்டியில் சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். இவரைத் தொடர்ந்து ரச்சின் ரவீந்திரா தனது முதல் உலகக் கோப்பையில் சதம் விளாசினார்.

CWC:உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறை; 4,658 ஒருநாள் போட்டிகளில் முதல் முறை; 11 வீரர்கள் இரட்டை இலக்க ரன்கள்!

இறுதியாக நியூசிலாந்து அணி 36.2 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 283 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில், டெவான் கான்வே 121 பந்துகளில் 19 பவுண்டரி 3 சிக்ஸர்கள் உள்பட 152 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ரச்சின் ரவீந்திரா 96 பந்துகளில் 11 பவுண்டரி 5 சிக்ஸர்கள் உள்பட 123 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அடைந்த சூப்பர் ஓவர் தோல்விக்கு நியூசிலாந்து அணி பழிக்கு பழி வாங்கியுள்ளது.

2023 உலகக் கோப்பையில் முதல் அரைசதம் அடித்த ஜோ ரூட்; ஹென்றி வேகத்தில் சுருண்ட இங்கிலாந்து 281 ரன்கள் குவிப்பு!

சாதனைகள்:

இங்கிலாந்து அணியில்,

  • உலகக் கோப்பை 2023 தொடரின் முதல் சிக்ஸர் மற்றும் பவுண்டரி அடித்த வீரர் – ஜானி பேர்ஸ்டோவ்
  • இங்கிலாந்து அணியில் அதிகபட்ச ஸ்கோர் எடுத்த வீரர் – ஜோ ரூட்
  • அதிக சிக்சர் அடித்த வீரர் – 2 சிக்ஸர்
  • அதிக பவுண்டரி அடித்த வீரர்கள் – ஜானி பேர்ஸ்டோவ் 4, ஜோ ரூட் 4, ஹாரி ப்ரூக் 4, லியாம் லிவிங்ஸ்டன் 3.
  • முதல் முறையாக அணியில் இடம் பெற்ற 11 வீரர்களும் இரட்டை இலக்க ரன்கள் குவித்துள்ளனர்.

விவாகரத்து பெற்ற ஷிகர் தவான்! மனைவி ஆயிஷா செய்த கொடுமைகளுக்கு முடிவுகட்டிய டெல்லி நீதிமன்றம்

நியூசிலாந்து அணியில்

  1. அதிக விக்கெட் எடுத்த வீரர் – மேட் ஹென்றி 3 விக்கெட்.
  2. ஒரு பவுண்டரி கூட கொடுக்காமல் பந்து வீசிய வீரர் – மிட்செல் சான்ட்னர்.
  3. 2023 உலகக் கோப்பை தொடரில் முதல் விக்கெட் கைப்பற்றிய வீரர் – மேட் ஹென்றி
  4. 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் முதல் போட்டியில் சதம் அடித்த முதல் வீரர் டெவான் கான்வே
  5. 2023 ஆம் ஆண்டு – தனது முதல் உலகக் கோப்பையின் முதல் போட்டியில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை ரச்சின் ரவீந்திரா படைத்துள்ளார்.
  6. உலகக் கோப்பையின் முதல் போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை டெவான் கான்வே (152 ரன்கள் நாட் அவுட்) படைத்துள்ளார்.
  7. நியூசிலாந்து அணியில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் ரச்சின் ரவீந்திரா.
  8. நியூசிலாந்து அணியில் அதிக பவுண்டரி அடித்த வீரர் டெவான் கான்வே.
  9. ஒருநாள் உலகக் கோப்பையில் சதம் அடித்த இளம் (23 வயது 321 நாட்கள்) நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை ரச்சின் ரவீந்திரா படைத்துள்ளார்.
  10. 2022 டி20 உலகக் கோப்பையின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.
  11. 2023 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி.        
  12. அகமதாபாத்தில் நடந்த ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் சென்னை அணியின் சார்பில் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
  13. அகமதாபாத்தில் நடந்த 2023 உலகக் கோப்பையின் முதல் போட்டியில் சதம் விளாசி அதனை 152 ரன்கள் வரை கொண்டு சென்றுள்ளார்.
  14. இதுவரையில் 138 ரன்கள் மட்டுமே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. தற்போது 152 ரன்கள் நாட் அவுட்டை தனது அதிகபட்ச ஸ்கோராக பதிவு செய்துள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023: இந்திய அணி விளையாடும் போட்டிகள் - முழு விவரம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios