விவாகரத்து பெற்ற ஷிகர் தவான்! மனைவி ஆயிஷா செய்த கொடுமைகளுக்கு முடிவுகட்டிய டெல்லி நீதிமன்றம்

இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் தனது மனைவி ஆயிஷாவிடம் இருந்து விவாகரத்து கோரி தொடர்ந்த வழக்கில் அவருக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்துள்ளது.

Cricketer Shikhar Dhawan Gets Divorce On Grounds Of Cruelty By Wife sgb

டெல்லி குடும்ப நீதிமன்றம் புதன்கிழமை இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் மற்றும் அவரைப் பிரிந்துள்ள மனைவி ஆயிஷாவுக்கும் விவாகரத்து வழங்கியுள்ளது. மனுதாரருக்கு (ஷிகர் தவான்) செய்த கொடுமையின் அடிப்படையில் அவர் விவாகரத்து பெற உரிமை உண்டு என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

இரு தரப்பும் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து செய்ய ஒப்புக்கொண்டதாகவும், அவர்களின் திருமணம் நீண்ட காலத்திற்கு முன்பே முடிவுக்கு வந்துவிட்டதாகவும் நீதிபதி ஹரிஷ் குமாரின் தீர்ப்பில் கூறியிருக்கிறார். ஆகஸ்ட் 8, 2020 முதல் இருவரும் கணவன் - மனைவியாக வாழவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஷிகர் தவான் கடந்த 2012ஆம் ஆண்டு ஆயிஷா முகர்ஜியை திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் ஸோராவர் என்ற மகன் உள்ளார். இவர்களின் திருமணத்துக்கு முன்பே ஆயிஷாவுக்கு ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு நபருடன் திருமணமாகி, அவர்களுக்கு 2 மகள்களும் இருந்தனர்.

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023: இந்திய அணி விளையாடும் போட்டிகள் - முழு விவரம்

அந்த நபருடனான திருமண உறவை முறித்துக்கொண்டு, நிரந்தரமாக இந்தியாவில் தன்னுடன் வசிப்பதாக உறுதி அளித்ததன், பேரில்தான் ஷிகர் தவான் ஆயிஷாவை மணம் முடித்துள்ளார். ஆனால், ஆயிஷா சொன்னபடி நடந்துகொள்ளாமல் முன்னாள் கணவருடன் மீண்டும் நெருக்கமாக இருந்துள்ளார்.

Cricketer Shikhar Dhawan Gets Divorce On Grounds Of Cruelty By Wife sgb

தனது 2 மகள்கள் மற்றும் மகன் ஸோராவருடன் ஆஸ்திரேலியாவுக்கே திரும்பியுள்ளார். இதனால் தனது மகனை பிரிந்து வேதனைக்கு உள்ளான ஷிகர் தவான், விவகாரத்து பெற முடிவு செய்தார்.

தன்னை வற்புறுத்தி அவரது பணத்தில் ஆஸ்திரேலியாவில் தன் பெயரில் சொத்துக்களை வாங்கியுள்ளதாவும் ஆயிஷா மீது தவான் தரப்பில் புகார் கூறப்படுகிறது. ஷிகர் தவானின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவர் அங்கம் வகிக்கும் ஐபிஎல் அணி நிர்வாகத்துக்கு செய்திகள் அனுப்பியதாகவும் ஆயிஷா மீது குற்றம்சாட்டப்படுகிறது.

இந்நிலையில், இந்தக் காரணங்களை முன்வைத்து ஷிகர் தவான் டெல்லி குடும்பநல நீதிமன்றத்தில் தொடர்ந்து விவாகரத்து வழக்கில் நீதிபதி ஹரிஷ் குமார் தீர்ப்பு வழங்கியுள்ளார். அதில், தவானின் வாதங்களை ஏற்று அவருக்கு விவாகரத்து வழங்கப்படுவதாகக் கூறியிருக்கிறார்.

மேலும், ஷிகர் தவானின் மகன் ஸோராவர் ஒவ்வொரு ஆண்டும் பாதி விடுமுறை நாட்களை தவான் மற்றும் அவரது குடும்பத்தினருடன் செலவிடும் வகையில், மகன் ஸோராவரை இந்தியாவுக்கு அழைத்துவர வேண்டும் என்றும் ஆயிஷாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஷிகர் தவான் விரும்பினால் ஆஸ்திரேலியாவுக்கு சென்று மகனைப் பார்க்கவும், இருவரும் வீடியோ காலில் சந்தித்து உரையாடவும் ஒத்துழைக்க வேண்டும் என ஆயிஷாவுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

ஹைட்ரஜனில் இயங்கும் சுசுகி பர்க்மேன்! ஜப்பான் மொபிலிட்டி ஷோவில் அறிமுகம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios