இந்திய அணி விளையாடும் 2023 உலகக் கோப்பை போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும், ஹாட் ஸ்டார் ஆப் மற்றும் இணையதளத்திலும் லைவ் ஸ்ட்ரீமிங் செய்யப்படும்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) 2023 உலகக் கோப்பைக்கான புதிய அட்டவணையை அறிவித்துள்ளது. இதில் இந்திய அணி விளையாடும் இரண்டு ஆட்டங்களின் தேதிகள் மாற்றப்பட்டுள்ளன.

அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டியின் தேதியும் மாற்றத்தைக் கண்டுள்ளது. நவராத்திரியின் முதல் நாளான அக்டோபர் 15ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த போட்டி வேறு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

பெங்களூருவில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியும் வேறுக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இந்தியாவின் இந்த கடைசி லீக் போட்டி தீபாவளியன்று நடக்க உள்ளது. இந்திய அணி லீக் சுற்றில் விளையாடும் போட்டிகளின் அட்டவணை கீழ் கொடுக்கப்பட்டுள்ளது.

World Cup 2023: உலகக் கோப்பை டிராபியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட கேப்டன்கள்!

போட்டி

தேதி

இடம்

நேரம்

இந்தியா vs ஆஸ்திரேலியா

அக். 8

எம்.ஏ. சிதம்பரம் மைதானம், சென்னை

பிற்பகல் 2 மணி

இந்தியா vs ஆப்கானிஸ்தான்

அக். 11

அருண் ஜேட்லி மைதானம், டெல்லி

பிற்பகல் 2 மணி

இந்தியா vs பாகிஸ்தான்

அக். 14

நரேந்திர மோடி மைதானம், அகமதாபாத்

பிற்பகல் 2 மணி

இந்தியா vs வங்கதேசம்

அக். 18

எம்.சி.ஏ. மைதானம், புனே

பிற்பகல் 2 மணி

இந்தியா vs நியூசிலாந்து

அக். 22

ஹெச்.பி.சி.ஏ. மைதானம், தர்மசாலா

பிற்பகல் 2 மணி

இந்தியா vs இங்கிலாந்து

அக். 29

எக்கானா மைதானம், லக்னோ

பிற்பகல் 2 மணி

இந்தியா vs இலங்கை

நவ. 2

வான்கடே மைதானம், மும்பை

பிற்பகல் 2 மணி

இந்தியா vs தென் ஆப்பிரிக்கா

நவ. 5

ஈடன் கார்டன் மைதானம், கொல்கத்தா

பிற்பகல் 2 மணி

இந்தியா vs நெதர்லாந்து

நவ. 12

எம். சின்னசாமி மைதானம், பெங்களூரு

பிற்பகல் 2 மணி

CWC 2023: பராமரிப்பின்றி இருக்கும் இருக்கைகள்; இதுல அமர்ந்து கிரிக்கெட் பார்க்க வேண்டிய நிலையில் ரசிகர்கள்?

இந்திய அணி லீக் சுற்றில் தகுதிபெற்று அரையிறுதிக்கு நுழையும் பட்சத்தில் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் எங்கே, எப்போது நடக்கும்?

அரையிறுதிப் போட்டி 1

நவ. 15

வான்கடே மைதானம், மும்பை

பிற்பகல் 2 மணி

அரையிறுதிப் போட்டி 2

நவ. 16

ஈடன் கார்டன் மைதானம், கொல்கத்தா

பிற்பகல் 2 மணி

இறுதிப்போட்டி

நவ. 19

நரேந்திர மோடி மைதானம், அகமதாபாத்

பிற்பகல் 2 மணி

2023 உலகக் கோப்பை போட்டிகளை எப்படிப் பார்ப்பது?

இந்தியாவின் 2023 உலகக் கோப்பை போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும், ஹாட் ஸ்டார் ஆப் மற்றும் இணையதளத்திலும் லைவ் ஸ்ட்ரீமிங் செய்யப்படும்.

இந்தியா அக்டோபர் 8ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது பயணத்தைத் தொடங்கும். சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Cricket World Cup 2023: கேப்டன்ஸ் மீட்டிங்கில் நன்றாக அசந்து தூங்கிய தென் ஆப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா!

இன்று தொடங்கும் உலகக் கோப்பைத் தொடரின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இந்திய நேரப்படி பகல் 2 மணிக்குத்த ஆரம்பமாகும் இந்தப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்க உள்ளது.