Asianet News TamilAsianet News Tamil

IRE vs NZ: 2வது ODIயிலும் பிரேஸ்வெல் அசத்தல் பேட்டிங்.. அயர்லாந்தை வீழ்த்தி தொடரை வென்றது நியூசிலாந்து அணி

அயர்லாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்று 2-0 என தொடரை வென்றது நியூசிலாந்து அணி.
 

new zealand beat ireland in second odi and win series by 2 0
Author
Dublin, First Published Jul 13, 2022, 5:03 PM IST

நியூசிலாந்து அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் பிரேஸ்வெல்லின் அதிரடியான சதத்தால்(127) ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று 1-0 என நியூசிலாந்து அணி முன்னிலை வகித்த நிலையில் 2வது ஒருநாள் போட்டி டப்ளினில் நடந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய அயர்லாந்து அணியில் மெக்பிரைன் (28), காம்ஃபெர்(25), மார்க் அடைர் (27) ஆகியோர் சிறு சிறு பங்களிப்பு செய்தாலும், டாக்ரெலின் அதிரடி அரைசதத்தால் 200 ரன்களை கடந்த அயர்லாந்து அணி 48 ஓவரில் 216 ரன்கள் அடித்தது.

இதையும் படிங்க - ரோஹித் சர்மா மாபெரும் சாதனை.. ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் டாப் இந்திய வீரர்..! சர்வதேச அளவில் 4ம் இடம்

அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த டாக்ரெல், 61 பந்தில் 74 ரன்கள் அடித்தார். அவரது அதிரடி அரைசதத்தால் தான் 216 ரன்களையாவது எட்டியது அயர்லாந்து அணி. மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்ததால் 48 ஓவரிலேயே ஆல் அவுட்டானது அயர்லாந்து அணி.

217 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர் ஃபின் ஆலன்(60) மற்றும் கேப்டன் டாம் லேதம்(55) ஆகிய இருவரும் அரைசதம் அடித்தனர். கடந்த போட்டியில் சதமடித்து நியூசிலாந்துக்கு வெற்றியை தேடிக்கொடுத்த மைக்கேல் பிரேஸ்வெல் இந்த போட்டியிலும் பொறுப்புடன் பேட்டிங் ஆடி 40 பந்தில் 42 ரன்கள் அடித்து கடைசிவரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இதையும் படிங்க - ஐசிசி ஒருநாள் தரவரிசையில் 5 இடங்கள் முன்னேறி முதலிடம் பிடித்தார் பும்ரா..!

39வது ஓவரில் இலக்கை அடித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி 2-0 என ஒருநாள் தொடரை வென்றது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios