Asianet News TamilAsianet News Tamil

முதல் இன்னிங்ஸில் பொட்டளமான நியூசிலாந்து.. 2வது இன்னிங்ஸில் சுதாரிப்பான பேட்டிங்..! இங்கிலாந்துக்கு சவால்

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 209 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி ஃபாலோ ஆன் பெற்று 2வது இன்னிங்ஸை ஆடிவரும் நியூசிலாந்து அணி வீரர்கள் இந்த இன்னிங்ஸில் சுதாரிப்பாக பேட்டிங் ஆடிவருகின்றனர்.
 

new zealand batsmen batting well in second innings of second test against england
Author
First Published Feb 26, 2023, 3:01 PM IST

இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் டெஸ்ட்டில் 267 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என இங்கிலாந்து அணீ தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், 2வது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் பிப்ரவரி 24ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. 2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

இங்கிலாந்து அணி:

ஜாக் க்ராவ்லி, பென் ட்க்கெட், ஆலி போப், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் ஃபோக்ஸ் (விக்கெட் கீப்பர்), ஆலி ராபின்சன், ஸ்டூவர்ட் பிராட், ஜாக் லீச், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

IND vs AUS: ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு முட்டு கொடுக்கும் மேக்ஸ்வெல்..!

நியூசிலாந்து அணி:

டாம் லேதம், டெவான் கான்வே, கேன் வில்லியம்சன், வில் யங், ஹென்ரி நிகோல்ஸ், டேரைல் மிட்செல், டாம் பிளண்டெல் (விக்கெட் கீப்பர்), மைக்கேல் பிரேஸ்வெல், டிம் சௌதி (கேப்டன்), மேட் ஹென்ரி, நீல் வாக்னர்.

முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி வீரர்கள் ஜாக் க்ராவ்லி(2), பென் டக்கெட் (9) ஆலி போப்(10) ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, 21 ரன்களுக்கே இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் ஹாரி ப்ரூக்கும் ஜோ ரூட்டும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி இருவருமே சதமடித்தனர். அதிரடியாக ஆடி சதமடித்த ஹாரி ப்ரூக் 176 பந்தில் 186 ரன்களையும், ரூட் 153 ரன்களையும் குவிக்க முதல் இன்னிங்ஸில் 435 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது இங்கிலாந்து அணி.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணி தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. டெவான் கான்வே(0), கேன் வில்லியம்சன்(4), வில் யங்(2) ஆகியோர் படுமோசமாக ஆடி ஆட்டமிழந்தனர். கொஞ்ச நேரம் தாக்குப்பிடித்து ஆடிய தொடக்க வீரர் டாம் லேதமும் 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஹென்ரி நிகோல்ஸ் 30 ரன்களுக்கும், டேரைல் மிட்செல் 13 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, 103 ரன்களுக்கே நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் அபாரமாக பேட்டிங் ஆடிய கேப்டன் டிம் சௌதி அரைசதம் அடித்து 73 ரன்களை விளாச, முதல் இன்னிங்ஸில் 209 ரன்கள் அடித்தது நியூசிலாந்து அணி.

முதல் இன்னிங்ஸில் முடிவில் ஃபாலோ ஆன் பெற்ற நியூசிலாந்து அணி 2வது இன்னிங்ஸை தொடர்ந்தது. 2வது இன்னிங்ஸில் நியூசிலாந்து வீரர்கள் சுதாரிப்புடன் பேட்டிங் ஆடினர். தொடக்க வீரர்கள் டெவான் கான்வே மற்றும் டாம் லேதம் ஆகிய இருவரும் நிலைத்து நின்று பொறுப்புடன் பேட்டிங் ஆடி அரைசதம் அடித்து முதல் விக்கெட்டுக்கு 149 ரன்களை குவித்தனர். கான்வே 61 ரன்களுக்கும், டாம் லேதம் 83 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.  வில் யங் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின்னர் கேன் வில்லியம்சனும் ஹென்ரி நிகோல்ஸும் இணைந்து பேட்டிங் ஆடிவருகின்றனர்.

மைக் டைசன் கூற்றை சுட்டிக்காட்டி ஆஸ்திரேலிய அணிக்கு பவர்ஃபுல் பன்ச் கொடுத்த கிரேக் சேப்பல்..!

3ம் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணி 2வது இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் அடித்துள்ளது. கேன் வில்லியம்சன் 25 ரன்களுடனும், ஹென்ரி நிகோல்ஸ் 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios