Asianet News TamilAsianet News Tamil

டி20 உலக கோப்பை: நியூசிலாந்து - இலங்கை அணிகள் பலப்பரீட்சை.. இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

டி20 உலக கோப்பையில் நாளை (அக்டோபர் 29) சிட்னியில் நடக்கும் போட்டியில் மோதும் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

new zealand and sri lanka teams probable playing eleven for t20 world cup match
Author
First Published Oct 28, 2022, 9:11 PM IST

டி20 உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், மழை பெரிய பிரச்னையாக உள்ளது. மெல்பர்னில் விடாமல் பெய்த தொடர் மழை காரணமாக இன்று ஒரே நாளில் 2 போட்டிகள் பாதிக்கப்பட்டன.

மெல்பர்னில் நடக்கவிருந்த ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து போட்டி மற்றும் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து போட்டி ஆகிய 2 போட்டிகளும் ரத்தாகின. 

டி20 உலக கோப்பை: மழையால் ரத்தாகும் போட்டிகள்.. குறையும் சுவாரஸ்யம்..! இதோ புள்ளி பட்டியல்

க்ரூப் 1-ல் நியூசிலாந்து, இங்கிலாந்து, அயர்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 4 அணிகளும் தலா 3 புள்ளிகளுடன் முதல் 4 இடங்களில் உள்ளன. இதில் நியூசிலாந்து அணி மட்டுமே 2 போட்டிகளில் ஆடி 3 புள்ளிகளை பெற்றுள்ளது. மற்ற 3 அணிகளும் தலா 3 போட்டிகளில் ஆடியுள்ள நிலையில், 3 புள்ளிகளை பெற்றுள்ளன. இன்னும் 2 போட்டிகள் மட்டுமே அந்த அணிகளுக்கு எஞ்சியிருப்பதால் இது பெரும் நெருக்கடி தான்.

முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி பெற்ற நிலையில், ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக நியூசிலாந்து ஆட வேண்டிய போட்டி மழையால் ரத்தானது. அயர்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்ற இலங்கை அணி ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வி அடைந்தது.

இந்த 2 அணிகளும் மோதும் போட்டி நாளை சிட்னியில் நடக்கிறது. இந்த போட்டி இரு அணிகளுக்குமே மிக முக்கியமான போட்டி. நியூசிலாந்து அணியின் கை சற்று ஓங்கியிருக்கிறது. இலங்கை அணிக்கு வீரர்கள் காயம் பெரும் பிரச்னையாக அமைந்துள்ளது.

ஏற்கனவே அந்த அணியின் முக்கியமான ஃபாஸ்ட் பவுலர் துஷ்மந்தா சமீரா காயம் காரணமாக டி20 உலக கோப்பையிலிருந்து விலகிய நிலையில், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் 5 பந்துகள் வீசிய பினுராவும் காயமடைந்தார். அவருக்கு மாற்று வீரராக நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் கசுன் ரஜிதா ஆடுவார். அதைத்தவிர இலங்கை அணியில் வேறு மாற்றத்திற்கு வாய்ப்பில்லை.

உத்தேச இலங்கை அணி:

பதும் நிசாங்கா, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), தனஞ்செயா டி சில்வா, சாரித் அசலங்கா, பானுகா ராஜபக்சா, தசுன் ஷனாகா (கேப்டன்), வனிந்து ஹசரங்கா, சாமிகா கருணரத்னே, மஹீஷ் தீக்‌ஷனா, லஹிரு குமாரா, கசுன் ரஜிதா.

பாகிஸ்தானை பங்கமாய் கலாய்த்த ஜிம்பாப்வே அதிபர்..! கோபப்படாமல் பெருந்தன்மையுடன் பதிலடி கொடுத்த பாக்., பிரதமர்

உத்தேச நியூசிலாந்து அணி:

ஃபின் ஆலன், டெவான் கான்வே, கேன் வில்லியம்சன் (கேப்டன்), க்ளென் ஃபிலிப்ஸ், ஜேம்ஸ் நீஷம், மார்க் சாப்மேன், மிட்செல் சாண்ட்னெர், இஷ் சோதி, டிம் சௌதி, லாக்கி ஃபெர்குசன், டிரெண்ட் போல்ட்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios